Published : 06 Jul 2021 12:07 PM
Last Updated : 06 Jul 2021 12:07 PM

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களைக் குறிவைக்கும் பயரங்கரவாதிகள்: 140 பேர் கடத்தல்

பிரதிநிதித்துவப் படம்.

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் 140 பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தி அங்கிருந்த காவலர்களைச் சுட்டு, சுமார் 140 மாணவர்களைக் கடத்திச் சென்றனர்.

இதில், பள்ளியில் இருந்த 25 மாணவர்கள் மட்டுமே தப்பித்தனர். மாணவர்களை பயங்கரவாதிகள் எங்கு கடத்திச் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை” என்று செய்தி வெளியானது.

போலீஸார் தரப்பில், ”நாங்கள் 25 மாணவர்களை மீட்டு வந்தோம். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது” என்றார்.

இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பள்ளி மாணவர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரிய நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது. 2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x