Last Updated : 21 Jun, 2021 11:54 AM

 

Published : 21 Jun 2021 11:54 AM
Last Updated : 21 Jun 2021 11:54 AM

உலக யோகா தினம்: டம்ளர்கள், செங்கல்களில் அமர்ந்து யோகாசனம் செய்த குழந்தைகள்

உலக யோகா தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் டம்ளர்கள், செங்கற்கள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த குழந்தைகள்.

அரியலூர்

உலக யோகா தினத்தையொட்டி 3 டம்ளர்களின் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து குழந்தைகள் அசத்தினர்.

அரியலூர் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் உலக யோகா தினத்தையொட்டி ருத்ர சாந்தி யோகாலயாவின் யோகரத்னா கிருஷ்ணகுமார் முன்னிலையில் பல்வேறு யோகாசனங்களைக் குழந்தைகள் இன்று (ஜூன் 21) செய்தனர். இதில் பத்மாசனம், யோகமுத்ரா, மத்ஸ்யாசனம், வஜ்ராசனம், விருச்சிகாசனம், தனுராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களைச் செய்தனர்.

மேலும், குழந்தைகள் மூன்று டம்ளர்களின் மீது அமர்ந்து பத்மாசனத்தை அரை மணி நேரம் மேற்கொண்டனர். அதேபோல் மூன்று செங்கல்களைச் செங்குத்தாக நிறுத்தி அதன் மீது அமர்ந்து கையில் தீபத்தை ஏந்தியவாறு பத்மாசனம் செய்தனர்.

யோகாசனங்கள் செய்வதன் மூலம் மனது ஒரு நிலைப்படுத்தப்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகள் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழப் பயனளிப்பதாக யோகாசனத்தை மேற்கொண்ட குழந்தைகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x