Published : 12 Jun 2021 08:55 PM
Last Updated : 12 Jun 2021 08:55 PM
தேனி மாவட்டத்தின் 15-வது காவல் கண்காணிப்பாளராக டோங்ரே பிரவின் உமேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த இ.சாய்சரண்தேஜஸ்வி காஞ்சிபுரத்திற்கும், கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி டோங்ரே பிரவின் உமேஷ்(36) தேனிக்கும் கடந்த வாரம் பணியிடை மாறுதல் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேனி எஸ்பி.யாக டோங்ரே பிரவின்உமேஷ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மகராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2016-ம் ஆண்டு இந்திய காவல் பணி தேர்வில் தேர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
2020-ம் ஆண்டு முதல் கவர்னரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்தவர் தற்போது தேனியில் 15-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுதான் பொறுப்பேற்றுள்ளதால் மாவட்ட அளவிலான குற்றநிலவரங்களை முதலில் ஆய்வு செய்த பின்பு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT