Published : 05 Jun 2021 08:32 PM
Last Updated : 05 Jun 2021 08:32 PM
யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய அண்ணன் தம்பி உள்ளிட்ட நான்கு பேர்களை ராமநாதபுரம் போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் சாராயம் காய்ச்சி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சனிக்கிழமை காட்டூரணியில் போலீஸார் ரோந்து சென்றனர்.
ரோந்தின் போது காட்டூரணியைச் சேர்ந்த இன்பராஜ் (60) அவரது சகோதரர் சங்கர் (55) மற்றும் கார்த்திக்(29), விஜய் (28) ஆகிய 4 பேரும் குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த போது பிடிபட்டனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேர்களையும் கைது செய்த கேணிக்கரை போலீசார் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட தளவாடப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஊரடங்கில் மது கடைகள் அடைக்கப்பட்டதால் மதுபானம் கிடைக்காததால் யூட்யூப் பார்த்து குக்கரைப் பயன்படுத்தி சாராயம் காய்ச்சியதாக தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
என்று ஒட்டுமொத்த மானிட சமுதாயமே, ஒழுங்கு மற்றும் சமூக குற்றமாக கருதி ஒதுக்கி வைத்திருந்த ,ஒரு தீய பழக்கவழக்கத்தை பொறுப்புள்ள அரசாங்கமே அதிகாரப் பூர்வமான அங்கீகரித்துடன்,டாஸ்மாக் எனப் பெயரிட்டு வர்த்தக ரீதியாக, பாதுகாப்போடு அத்தியாவசியப் பட்டியலிட்டு,பாமரமக்களைப் பழக்க,வழக்கப்படுத்தி விட்டு, இன்று கொரோனாவின் பெயரில் திடு..திடுவென தொடர்ந்து அடைத்து வைத்தால்,ஏதாவதொரு வகையில் அரசு மற்றும் அதிகாரிகள் ஆலோசித்து அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பதில்,தொடர்ந்து அடைத்து வைத்தால் அடிட்டாகி விட்ட, மதுப்பிரியர்கள் இப்படிப்பட்ட சமூக குற்றங்களில் தங்கள் ஆட்படுத்திக் கொள்ளத்தானே செய்வார்கள். நிலைமை கட்டுமீறுமுன்,ஏதேனும் அபாயகரமான அசம்பாவிதம் நிகழும் முன்,அரசாங்கமே இதற்கான சரியான வழியை ஆய்ந்தறிய வேண்டியது பொறுப்புமிக்க ஒரு அரசின் கடமையாகும்.
0
0
Reply