Last Updated : 02 Jun, 2021 03:06 PM

 

Published : 02 Jun 2021 03:06 PM
Last Updated : 02 Jun 2021 03:06 PM

கரோனா தொற்றுக்கு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு

சுந்தரி | கோப்புப் படம்.

ஆற்காடு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவரது மனைவி சுந்தரி (56). இவர் திமிரி அடுத்த அல்லாளச்சேரி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு நோய்த்தொற்று உறுதியாகவில்லை. இதனால், அவர் நிம்மதியடைந்த வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்றிரவு சுந்தரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனே, அவரது குடும்பத்தார் சுந்தரியை வாலாஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அப்போது, அவரது உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்ததால் உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் கரோனா வழிகாட்டுதல்படி, கலவை மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை ஆசிரியை சுந்தரிக்கு, உதயகுமார், மோகன்குமார் என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x