Published : 21 May 2021 08:01 PM
Last Updated : 21 May 2021 08:01 PM
ராமேசுவரம் அருகே குருசடை தீவு மற்றும் புதுமடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் அருகே குருசடை தீவு கடற்பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக வனத்துறையினர் மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மண்டபம் மெரைன் போலீஸார், குருசடை தீவு கடற்கரையில் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கிய மூட்டையை சோதனை செய்தனர்.
சோதனையின்போது அந்த மூட்டைக்குள் 17 பொட்டலங்கள் கொண்ட 34 கிலோ கஞ்சா இருந்தது.
முன்னதாக வியாழக்கிழமை புதுமடம் கடற்பகுதியில் ஒதுங்கிய சாக்கு மூட்டையை உச்சிப்புளி காவல்துறையினர் மீட்டு காவல்துறையினர் சோதனை செய்ததில் மூட்டைக்குள் 20 பொட்டலங்கள் கொண்ட 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா அடங்கிய மூடைகள் இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இதனை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment