Published : 14 May 2021 08:54 PM
Last Updated : 14 May 2021 08:54 PM
கரோனா பாதிப்பால் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கிறார்கள். மக்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர்க் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் gaரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.
மக்களைக் காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால்(1/3) @CMOTamilnadu
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 14, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT