Published : 12 May 2021 05:16 PM
Last Updated : 12 May 2021 05:16 PM
கோயில் அன்னதான திட்டம் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு 365 உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி கோயில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில், கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் அபயவரத ஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்தக் கோயில்களில் இருந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதோடு கூடுதலாக உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து தென்காசி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிசிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இந்தக் கோயில்களில் இருந்து 365 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பளர் ஜெஸ்லினிடம் வழங்கப்பட்டது.
கோயில் செயல் அலுவலர்கள் கேசவராஜன், சுசீலாராணி, தென்காசி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் கலாமணி மற்றும் கோயில் பணியாளர்கள் பாலமுருகன், கருப்பசாமி ஆகியோர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி தினமும் வழக்கம்போல் கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதோடு, கூடுதலாக உணவுப் பொட்டலங்கள் மருத்துவத்துறையினரால் தெரிவிக்கப்படும் தேவைக்கேற்ப வழங்கப்படும் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT