Published : 07 May 2021 11:28 AM
Last Updated : 07 May 2021 11:28 AM
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் இறந்தவரின் சடலம் மாறிவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 46 வயது ஆண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சவக்கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கரோனா விதிமுறைப்படி பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டது. பின்னர், இவரது உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
ஊருக்குச் சென்ற பிறகு இறந்தவர் 55 வயது மதிக்கத்தக்கவராக இருப்பதால், வேறொருவரின் சடலம் என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலும், அவரது மகனும் இச்சடலம் தனது தந்தையின் உடல் இல்லை எனக் கூறினார்.
இதையடுத்து, இச்சடலத்தை உறவினர்கள் மீண்டும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT