Published : 03 Apr 2021 11:03 AM
Last Updated : 03 Apr 2021 11:03 AM
ஆர்எஸ்எஸ்ஸின் புதிய பொதுச்செயலாளராக தத்தத்ரேயா ஹோசபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு ரொம்பவே நெருக்கமானவர். இவரை இந்த இடத்துக்குக் கொண்டுவர 2014-லிருந்து இதற்கு முன் இரண்டு முறை முயற்சி எடுத்தாராம் மோடி.
மூன்றாவது முறையாக இப்போதுதான் காரியம் கைகூடி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பதவியானது தலைவர் பதவிக்கு அடுத்த நிலையிலான பதவி தான் என்றாலும் இனி வரும் காலத்தில் பாஜக நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய பதவி இது என்று சொல்லப்படுகிறது.
ராமர் கோயில் விவகாரம், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரங்களை அமலாக்கியதன் மூலம் ஆர்எஸ்எஸ்ஸின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறது மோடி அரசு. இந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய ஹொசபல், 2024-ல் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்விலும் தனக்கு ஆதரவாக நிற்பார் என கணக்குப் போட்டே அவரை இந்த இடத்துக்கு நகர்த்தி இருக்கிறாராம் மோடி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT