Published : 25 Mar 2021 11:15 AM
Last Updated : 25 Mar 2021 11:15 AM
அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக அறிவித்த பிறகு அமைதி காத்துவரும் சசிகலா, 3 நாள் பயணமாக 17-ம் தேதி பின்னிரவில் தஞ்சை வந்தார். எம்.நடராஜனின் தம்பி பழனிவேலுவின் பேரக் குழந்தைகள் காதணி விழாவுக்காகவும், நடராஜனின் மூன்றாமாண்டு நினைவு தின (20-ம் தேதி) அஞ்சலிக்காகவும் இந்தப் பயணம்.
நடராஜனின் குலதெய்வ கோயிலான வீரனார் கோயிலில் நடந்த காதணி விழாவில் கலந்துகொண்ட சசிகலா, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வேறு சில கோயில்களுக்கும் விசிட் அடித்தார். இதனிடையே, 19-ம் தேதி காலையில், தஞ்சை அருளானந்த நகரில் உள்ளநடராஜனுக்கு சொந்தமான பங்களாவில் தங்கியிருந்த சசிகலாவை ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா.சேகரும், தஞ்சை தேமுதிக வேட்பாளர் ராமநாதனும் சந்தித்தார்கள். அப்போது, “ஜெயிச்சுட்டு வாங்க பேசுவோம்” என்று சொல்லி அவர்களுக்கு ஆசி வழங்கினாராம் சசிகலா.
இருவருக்கும் சசிகலாவை சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்தது டி.டிவி.தினகரனாம். அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, அமமுக, தேமுதிக வேட்பாளர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு ஆசி வழங்கியதை வைத்து, “சின்னாம்மா நிச்சயம் அரசியலைவிட்டுப் போகமாட்டாங்க” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உற்சாக மூடில் பேசிவருகிறாராம் டிடிவி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT