Last Updated : 17 Mar, 2021 05:26 PM

 

Published : 17 Mar 2021 05:26 PM
Last Updated : 17 Mar 2021 05:26 PM

கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

கொந்தகை அகழாய்வில் கிடைத்த மூடியநிலையில் உள்ள முதுமக்கள்தாழி.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரை கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி நடக்கிறது. இதில் 2 அடி ஆழத்தில் ஏற்கெனவே பாசிமணிகள், சில்லு வட்டு, பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் மணலால் ஆன கூம்பு வடிவ பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன.

தற்போது கொந்தகையில் மூடிய நிலையில் முதுமக்கள்தாழி கிடைத்துள்ளது. இப்பகுதி ஈமக்காடு பகுதியாக இருப்பதால் 6-ம் கட்ட அகழாய்வில் இருந்து தொடர்ந்து முதுமக்களதாழி கிடைத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x