Published : 10 Mar 2021 11:21 AM
Last Updated : 10 Mar 2021 11:21 AM
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அறைகள் மீண்டும் மூடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக சுகாதாரத் துறையை கண்டித்து தலைமைச் செயலக முற்றுகையில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அரசு மற்றும் தனியாரில் உள்ள அனைத்து துறைகளும் செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதை எதிர்த்தும், கரோனா பரவல் குறித்து உயர் நீதிமன்றத்திற்கு தவறான புள்ளிவிவரங்களை அளித்த தமிழக சுகாதாரத்துறையை கண்டித்தும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று (மார்ச் 10) தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.
சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் ஆவின் நுழைவு வாயில் அருகே ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
சுகாதாரத் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, முன்னேறிச் சென்ற வழக்கறிஞர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT