Published : 16 Feb 2021 08:26 PM
Last Updated : 16 Feb 2021 08:26 PM

மதுரையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிரந்தர கண்காட்சி வளாகம்: 3,000 பேர் அமரக்கூடிய பிரmமாண்ட அரங்கம், கார் பார்க்கிங் வசதி

மதுரை

மதுரையில் ரூ.25 கோடியில் மடீட்சியா நிரந்தர கண்காட்சி வளாகம் மற்றும் கருத்தரங்கு கூடம் அமைக்கப்படுகிறது.

இதற்கான நிலத்தை சென்னையில் நடந்த புதிய தொழில் முதலீடுகளுக்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் கே.பழனிசாமி, மடீட்சியாவுக்கு வழங்கினார்.

இதுகுறித்து மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மடீட்சியாவின் நீண்ட நாள் கனவு திட்டம் நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பது.

தற்போது தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த நிரந்தர கண்காட்சி வளாகம், மதுரை கப்பலூர் நான்குவழிச்சாலை துணைக்கோள் நகரம் அருகே 3.06 ஏக்கர் நிலத்தில் அமைகிறது.

இந்த இடத்தில் அமைய போகும் கண்காட்சி வளாகத்தில் சர்வதேச அளவிலான தொழில் கண்காட்சிகள் நடத்தவும், 3,000 பேர் அமரக்கூடிய அளவில் பிரமாண்ட அரங்கம், 500 பேர் அமரக்கூடிய மினி தொழில் கருத்தரங்கு கூடம், பிஸ்னஸ் சென்டர்க்கென தனி வளாகம், 40க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள், நவீன உணவுக்கூடங்கள், 500 கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x