Published : 13 Feb 2021 07:31 PM
Last Updated : 13 Feb 2021 07:31 PM
கேரளாவிற்குக் கடத்த முயன்ற நடராஜர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் போடி - முந்தல் சோதனைச்சாவடியில் காவல் உதவி கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.
அப்போது ஆண்டிபட்டியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற வேனை போலீஸார் மறித்தனர். ஆனால் வேன் நிற்காமல் போஜன்பார்க் வழியே உள்ள சந்துப்பகுதிக்குள் சென்றது. போலீஸார் ஜீப்பில் விரட்டி வந்து வேனை மறித்தனர்.
சோதனை செய்ததில் வேனுக்குள் பெரிய கோணிப்பை இருந்தது. அதனைப் பிரித்துப் பார்த்ததில் 3 அடி உயரத்தில் இரண்டே முக்கால் அடி அகலம் கொண்ட 30 கிலோ எடை உள்ள நடராஜர் சிலை இருந்தது.
தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்த பிறகே சிலையின் மதிப்பு குறித்த விபரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT