Published : 11 Feb 2021 01:32 PM
Last Updated : 11 Feb 2021 01:32 PM
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டும் இன்னிங்ஸிலும் மோசமாக விலையாடிய ரோஹித் சர்மா மற்றும் ரஹானேவை வி.வி.எஸ்.லக்ஷ்மண் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 420 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து 277 ரன்களில் தோல்வி அடைந்தது.
அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்களும், கில் 50 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் கோலி தலைமையில் சந்திக்கும் தொடர் 4-வது தோல்வியாகும்.
இப்போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களின் ஆட்டம் கிரிக்கெட் வல்லுனர்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த வகையில் வி.வி. எஸ் லஷ்மணும் விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து லஷ்மண் கூறும்போது, “ அடுத்த போட்டியில் ரோஹித் ச்ரமா மற்றும் ரஹானேவின் அர்பணிப்பை நான் காண வேண்டும். அவர்கள் பொடியை வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் இல்லையேல் டிரா செய்ய வேண்டும்.
இரண்டாவது இன்னிஸில் ரஹானே ஆட்டமிழந்த விதம் அவர் போட்டி மனப்பான்மையில் இல்லை என்பதை காட்டியது ஆண்டர்சன் வீசிய பந்தை முன்பே கணிக்க முடிந்தது. இருப்பினும் தவறான ஷாட்டால் அவர் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT