Last Updated : 07 Feb, 2021 01:58 PM

 

Published : 07 Feb 2021 01:58 PM
Last Updated : 07 Feb 2021 01:58 PM

யாதவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்: கோகுல மக்கள் கட்சி தீர்மானம்

யாதவ சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வலியறுத்தி கோகுல மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விருதாச்சலம் வானொலி திடலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.

இம் மாநாட்டிற்கு கோகுல மக்கள் கட்சி தலைவர் சேகர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் ஆயிரக்கணக்கான யாதவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கோகுல மக்கள் கட்சித் தலைவர் சேகர் பேசுகையில், "தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக வாழும் யாதவர் சமுதாயத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடியும் வரை தற்காலிகமாக தனி இட ஒதுக்கீடாக 16 சதவீதம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என இந்த மாநாடு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல அரசியலில் கோகுல மக்கள் கட்சியை அரவணைக்கும் கட்சிகளோடு இணைந்து செயலாற்றத் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கான தொகுதி பங்கீடு கொடுப்பவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். கூட்டணி இல்லையென்றாலும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்கமாட்டோம்.

சென்னையில் அடுத்த மாதம் 7-ம் தேதி மாநிலம் தழுவிய யாதவர் எழுச்சி மாநாடு நடத்த உள்ளோம் இதில் 5 லட்சம் பேரை ஒன்று திரட்டி எங்கள் கோரிக்கையை வலுப்பெற செய்வதற்காகவும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்

முன்னதாக விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாநாடு பந்தலை வந்தடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x