Published : 03 Feb 2021 09:40 PM
Last Updated : 03 Feb 2021 09:40 PM
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறப்பு விழாவில் அமைச்சர், ஆட்சியரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கல்லல் அருகே வேப்பங்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதற்கட்டமாக 75 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையத்தை இன்று கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், முன்னாள் எம்பி செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவின்போது அங்கு வந்த கிராமமக்கள் சிலர், ‘சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்காக கையகப்படுத்திய நிலங்களின் உரிமைதாரர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை. வரத்துக் கால்வாய்களை அடைத்துவிட்டதால் விவசாயம் பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தினர் கிராமமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை,’ என கூறி அமைச்சர், ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT