Published : 25 May 2024 07:00 AM
Last Updated : 25 May 2024 07:00 AM

விஐடி சென்னை, ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ - பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டும் தொடர்

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதலை வழங்கும், விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் 15-வது பகுதி நாளை மதியம் 2 மணிக்கும், நிறைவு நிகழ்வு மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வை, ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. நாளை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள 15-வது பகுதியில் ‘ஏரோ ஸ்பேஸ் & ட்ரோன்ஸ்: கல்வி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், ஐஐடி கான்பூர் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் சதீஷ் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

மயில்சாமி அண்ணாதுரை

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள, நிகழ்வின் நிறைவுப் பகுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ்: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்புகள்' எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார்.

இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார். இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பல்வகையான படிப்பு கள், அதற்கான நுழைவுத் தேர்வுகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்வின் நிறைவாக, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK006 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர்கோடு மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 20 மாணவர்களுக்கு பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் வி.டில்லிபாபு இணைந்து எழுதிய ‘இந்தியா 75’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x