Published : 03 May 2024 08:04 AM
Last Updated : 03 May 2024 08:04 AM

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர் கல்வி’ பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் தொடர் நிகழ்வு

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ - மாணவியர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் ஐந்தாவது, ஆறாவது பகுதி நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும், ஏழாவது பகுதி நாளை மறுநாள் (ஞாயிறு) மாலை 4 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

வரும் சனிக்கிழமையன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள ஐந்தாம் பகுதியில் ‘காமர்ஸ், சார்ட்டட் அக்கவுண்டன்ஸி & பிசினஸ் மேனேஜ்மெண்ட் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் ஆர்.மோகன் ராஜ், சார்ட்டட் அக்கவுண்டன்ட் டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
வரும் சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆறாவது பகுதியில் ‘ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி & கிளவுடு கம்ப்யூட்டிங் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், சென்னை விஐடி, ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினீயரிங் மூத்த அசோசியேட் புரபசர் டாக்டர் என்.கணேஷ், பெங்களூரு C-DAC செயல் இயக்குநர் டாக்டர் எஸ்டி.சுதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

வரும் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஏழாவது பகுதியில் ‘ஆர்க்கியாலஜி கோர்சஸ் & வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மெரிடைம் ஹிஸ்ட்ரி அண்ட் மரைன் ஆர்க்கியாலஜி துறை பேராசிரியர் வி.செல்வகுமார், ஏஎஸ்ஐ சூப்பிரண்டெண்டிங் ஆர்க்கியாலஜிஸ்ட் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இரு நிகழ்வைவும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
இந்நிகழ்வில் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/UUK003 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 30 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘எந்திரத் தும்பிகள்’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x