Published : 07 Nov 2023 03:41 PM
Last Updated : 07 Nov 2023 03:41 PM
யார் பங்கேற்கலாம்? - ஜூனியர் பிரிவு: 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் (தமிழ் வழி, ஆங்கில வழி) பங்கேற்கலாம். | சீனியர் பிரிவு: 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் (தமிழ் வழி, ஆங்கில வழி) பங்கேற்கலாம்.
என்ன செய்ய வேண்டும்? - மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும். அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். கூர்ந்து நோக்குதல், மக்களிடம் கருத்து கேட்டு, தகவல்களைத் திரட்டுதல், பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்தல் போன்ற பல அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும். ஆய்வின் தலைப்பு, ஆய்வுத் திட்டத்தின் நோக்கம், பிரச்சினைகளைக் கண்டறிய பயன்படுத்திய அறிவியல் வழிமுறை, பிரச்சினைகளின் பட்டியல், காரணங்கள், தீர்வுகள், தீர்வுகளை அமல்படுத்திய விதம் போன்ற விவரங்கள் அடங்கிய தங்கள் ஆய்வையும், அதற்குரிய புகைப்படங்கள் (Images), வரைபடங்கள் (Graphs) போன்றவற்றையும் இணைக்கவும்.ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து, PDF File-ஆக அப்லோட் (upload) செய்ய வேண்டும்.
எப்படி, எப்போது சமர்ப்பிக்க வேண்டும்? - மாணவர்கள் தாங்கள் தொகுத்த ஆய்வுக் கட்டுரையை PDF File-ஆக https://www.htamil.org/NV2023 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, வரும் 2023 நவம்பர் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு குழுவில் எத்தனை பேர்? - ஒரு ஆய்வுக் குழுவில் அதிகபட்சம் 5 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு ஆசிரியரும் இருக்கலாம்.
அறிவியல் திருவிழா: வரும் டிசம்பர் மாதத்தில் 5 இடங்களில் மண்டல அளவிலான ஆய்வு சமர்ப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறும். சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மண்டல அறிவியல் திருவிழாவில் பங்கேற்கலாம். இவ்விழாவில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் குழுவினர் இறுதிப்போட்டியான மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்கலாம். இப்போட்டியில் தேர்வான மாணவர்கள் டிசம்பர் இறுதியில் வேலூர் விஐடி வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்பர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
இன்றே பதிவு செய்யுங்கள்…
உங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துங்கள்..!
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்:
திரு. ராஜ்குமார் - 9843225389
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT