Published : 25 Apr 2023 03:52 PM
Last Updated : 25 Apr 2023 03:52 PM
குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத்தொல்லையும் வயிற்று வலியும்:
குழந்தைகளின் செரிமான உறுப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைந்து இருக்காது. அதனால் அவர்கள் தாய்ப்பால் அல்லது பால் குடிக்கும் போது, சில குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை, வயிறு எரிச்சல், செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள் உப்புசம், அசவுகரியம், வயிறு வலி போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
எல்லா காலத்திற்குமான தீர்வு – உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உடனடித் தீர்வினைத் தருகிறது. கடந்த 170 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வரும் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், தலைமுறை தலைமுறையாக கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.
அழும் குழந்தையின் அழுகையை நிறுத்தி அவர்களை சகஜமான நிலைக்கு மாற்றுவதற்கு கிரைப் வாட்டர் கொடுப்பது மிகச் சிறந்த வழிமுறையாகும். 170 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா (Sarjikakshara)ஆகியவற்றை கவனமுடன் சேர்த்து ஆயுர்வேத முறையில் உருவாக்கப்பட்ட கலவையே "கிரைப் வாட்டர்". இது குழந்தைகள், சிறுவர்களுக்கு வாயு, அமிலத்தன்மை, அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. சதகுப்பை எண்ணெய் வயிற்று வலியை குறைக்கும் என்று அறியப்படுகிறது. அதேபோல சர்ஜி காக்ஷரா வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது.
பொதுவாக நான்கில் ஒரு குழந்தைக்கு கோலிக் எனப்படும் வயிற்று வலி உண்டாகிறது. குழந்தைகளின் ஆரம்ப வருடங்களில் உண்டாகும் இந்த வலி அவர்கள் வளரும்போது தானாகவே சரியாகி விடும்.
வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சரியாக தூங்க முடியாமல், அதிக சோர்வுடன் காணப்படுவார்கள். அவர்களின் அழுகை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். ஒரு நாளில் மூன்று மணி நேரம் கூட நீடிக்கும், ஒரு குறிப்பிட்ட முறையில் மீண்டும் வலி வரும். கோலிக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை வாரத்தில் மூன்று நாட்களுக்கு இதுபோன்ற அறிகுறியை வெளிப்படுத்துவார்கள். அதனால், நாம் முன்கூட்டியே அதனை அறிந்து கொள்ள முடியும். அழுகை நின்ற பிறகும், குழந்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும், இதனால் குழந்தை தூங்க முடியாமல் தவிக்கும்.
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குறித்து சில சந்தேகங்களும், கட்டுக்கதைகளும் இங்கே நிலவி வருகிறது. அவைகள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் பொதுவாக எழும் சில கேள்விகள்:
1. கிரைப் வாட்டர் தடை செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையா?
அ) இல்லை. சந்தையில் கிரைப் வாட்டர் தாராளமாக கிடைக்கிறது. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ கிரைப் வாட்டர் தடைசெய்யப்படவில்லை. பல பிராண்ட் கிரைப் வாட்டர்கள் கிடைக்கின்றன.
2. கிரைப் வாட்டரில் ஆல்கஹால் சேர்ந்திருக்கிறதா?
அ) இல்லை. இதனை பல்வேறு அமைப்புகளால் சோதனை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளதை லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. கிரைப் வாட்டர் சிறந்தது இல்லை. அது அழுகின்ற குழந்தைகளுக்கு உதவுவது இல்லையா?
அ) கிரைப் வாட்டர் ஆயுர்வேத முறையினால் உருவாக்கப்படுகிறது.
ஆ) இதில் இயற்கையான பொருள்கள், சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா ஆகியவை அடங்கியுள்ளன.
இ) இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத் தொல்லையை தீர்க்கிறது.
ஈ) குழந்தைகளை அவர்களின் வலியை மறந்து நிம்மதியாக உணர வைக்கிறது.
அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் எப்படி அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கமாக மாறியது என்பதை பற்றி அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி,"இந்தியாவில் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரின் பயணம், 1930-ம் ஆண்டு டிடிகே ஹெல்த் கேர் நிறுவனம் அதனை இங்கே இறக்குமதி செய்ததன் மூலம் தொடங்கியது. 100 சதவீதம் ஆயுர்வேத தயாரிப்பான உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர், குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாரால் ஏற்படும் வாயு, அமிலத்தன்மை போன்றவைகளை நீக்குகிறது.
மருத்துவ ஒழுங்குமுறை ஆணையங்கள் அனுமதித்தைவிட குறைவான அளவு பிரேசர்வ்டிவ்ஸ் தங்களின் பொருட்களில் இருப்பதை உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத ஒரு பொருள், உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் ஆல்கஹால் துளியும் இல்லை. இது பல்வேறு அமைப்புகளால் சோதனை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளது.
கிரைப் வாட்டர் அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாகும். கிரைப் வாட்டரில் கலந்துள்ள இயற்கையான உட்பொருள்கள் குழந்தையின் வயிற்று எரிச்சலுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
இதனால் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் உலகிலுள்ள கோடிக்கணக்கான தாய்மார்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. குழந்தைகளின் வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக விளங்கும் கிரைப் வாட்டர் பற்றி வாட்ஸ் அப்-ல் பரப்பப்படும் தவறான செய்திகள் மற்றும் வீடியோக்களை நம்பவேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT