Published : 24 May 2022 12:43 PM
Last Updated : 24 May 2022 12:43 PM
தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க்; இந்து தமிழ் திசையுடன் இணைந்து முன்னெடுப்பு ஏராளமான புதுமைப் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள புதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. பாரதியின் ‘புதுமைப் பெண்’ என்கிற தத்துவத்தில் உத்வேகம் பெற்ற தனிஷ்க், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்து தமிழ் திசையுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் தங்களைப் புதுமைப் பெண்ணாக அடையாளப்படுத்த முன்வரும் பெண்களைப் பற்றியோ, தாங்கள் அறிந்த வேறு புதுமைப் பெண்களைப் பற்றியோ பகிர்ந்து கொள்ள தனிஷ்க் அழைக்கிறது. புதுமைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதோ சில ‘புதுமைப் பெண்’களின் முகங்கள்:
அனிதா.பி:
மாற்றப்படாத மாயைகளை அழித்து, தன் சொந்த விதிகளை எழுதுபவர், அனிதா. தனது மனதைப் பின்பற்றி, உறுதியுடன் நிற்பதோடு, தன் பயணம் முழுவதும், வாழ்க்கை குறித்த நேர்மறையான அணுகுமுறையால் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார்.
சிதம்பர வடிவு:
இரண்டு முக்கியமான தூண்களின் மீது ஒரு ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்குபவர், சிதம்பர வடிவு. வெற்றிப்படிக்கட்டில் ஏறிச்செல்லும் போதுகூட, தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் தேவைகளை மிக முக்கியமானதாக கருதி, அதன்படி முடிவெடுத்து நம்பிக்கையோடு முன்னோக்கி சென்று கொண்டிருப்பவர்.
கவிதா.பி:
அறிவு எனும் விலை மதிப்பற்ற பரிசைக் கொண்டிருப்பவர். பிறரின் உணர்வுகளை அக்கறையோடு புரிந்துகொள்ளும் கவிதா, மக்களுக்கு உதவிட விரும்புகிறார். வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக கற்பித்து, அவர்களது எதிர்காலத்தைப் பிரகாசமாக்க உதவுகிறார்.
பிரீத்தி.பி:
தனது மிக விலையுயர்ந்த குணத்தை உலகிற்கு காட்டுபவர், பிரீத்தி. கடினமான காலங்களிலும் நேர்மறையாக இருந்து, கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுபவர். கடமையைப் பொறுப்புடன் செய்யும் அணுகுமுறையால் அரிதான மற்றும் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த ‘புதுமைப் பெண்’ணாக மிளிர்கிறார்.
நீங்களும் உங்களது அனுபவ கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது அருகாமையில் உள்ள தனிஷ்க் ஷோரூமுக்கு நேரில் வந்து உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் அனுபவங்கள் தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெறும்.
இதுவரை நூற்றுக்கணக்கான புதுமைப் பெண்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார்கள். நீங்களும் விரைந்து உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் பல புதுமைப் பெண் கதைகளைப் பார்க்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...