Published : 15 May 2022 06:33 AM
Last Updated : 15 May 2022 06:33 AM

தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து முன்னெடுப்பு

பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள புதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. தங்களைப் புதுமைப் பெண்ணாக அடையாளப்படுத்த முன்வரும் பெண்கள் தங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ள தனிஷ்க் அழைக்கிறது. தங்களைப் பற்றியோ தாங்கள் அறிந்த வேறு புதுமைப் பெண்களைப் பற்றியோ ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் பகிர்ந்துகொள்ள அழைக்கிறது தனிஷ்க். அடையாளம் காணப்படும் புதுமைப் பெண்களைக் கொண்டாடும்விதமாக அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் தனிஷ்க் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தனிஷ்க் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் ரஞ்சனி கிருஷ்ணஸ்வாமி கூறுகையில், “தனிஷ்க் நிறுவனத்துக்கு தமிழ்நாடு எப்போதுமே சிறப்பானது. காரணம் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனிஷ்க்கின் நகை உற்பத்திக் கூடம் தமிழ்நாட்டின் ஓசூரில்தான் நிறுவப்பட்டது. அதேபோல் தனிஷ்க்கின் முதல் விற்பனை பிரிவு சென்னை கத்தீட்ரல் சாலையில் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகள் பயணத்தில் தமிழகத்தின் புதுமைப் பெண்கள் தங்கள் அறிவாலும் திறமையாலும் உறுதியாலும் அன்பாலும் எங்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.

பாரதியார் உருவாக்கிய ‘புதுமைப் பெண்’ என்கிற தத்துவம் தனிஷ்க்கின் உத்வேகம். கடந்த ஆண்டு சென்னை மக்களோடு நாங்கள் நடத்திய கலந்துரையாடலுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும் பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும் புதுமையின் முன்னோடியாகவும் விளங்குகிறார்கள். அவர்கள் இவை இரண்டையும் இணைத்துப் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப தாங்கள் மாறியதுடன் தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று ஏராளமான பெண்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இன்றைய புதுமைப் பெண்கள் பாரம்பரியத்துக்கு உயிர் கொடுப்பதுடன் புதுமையின் ஒளியையும் ஏற்றுகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் இந்தப் புதுமைப் பெண்களை தனிஷ்க் கொண்டாட விரும்புகிறது. இந்த முயற்சிக்காக நாங்கள் ‘தி இந்து’ குழுமத்துடன் கைகோக்கிறோம். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையில் ஒளி தரும் தமிழகத்தின் பெண்களைப் பெருமைப்படுத்துவதும் கொண்டாடுவதும்தான் எங்களது இந்த முயற்சியின் நோக்கம்” என்றார்.

மேலும் விவரங்களை அறியவும் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யவும் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். அல்லது உங்கள் அருகாமையில் உள்ள தங்கள் ஷோரூமுக்கு நேரில் வந்து உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறது தனிஷ்க்.

tanishq.co.in/pudhumai-penn

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x