Published : 06 Mar 2022 08:06 AM
Last Updated : 06 Mar 2022 08:06 AM
சென்னை.
டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் கடந்த பிப் 15 முதல் தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை மூன்று பகுதிகள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் நான்காம் பகுதி நாளை (மார்ச்.7) முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
வாரம் -4 வீடுகளில் சுகாதாரம்:
மார்ச் 07, திங்கள். பதினோறாம் பகுதியில், தூய்மையான வீடு, செல்லப்பிராணிகளின் தூய்மை.
மார்ச் 09, புதன். பனிரெண்டாம் பகுதியில், கழிவுகளைப் பயன்படுத்துதல், 3Rs-ஐ புரிந்துகொள்வது.
மார்ச் 11, வெள்ளி. பதிமூன்றாம் பகுதியில், எங்கும் மாசுபாடு, பாதுகாப்பான குடிநீர்.
இந்த சுகாதார நிகழ்வில் டாக்டர் ராதாலெட்சுமி செந்தில் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ள வீடியோக்களிலிருந்து ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் சரியான பதிலைத் தந்து பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் பார்க்கலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணைய வழி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாகவுள்ளது. அந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
மேலும், உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேள்விகளையும் சேர்த்தனுப்பி வையுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT