Published : 29 Oct 2021 03:28 PM Last Updated : 29 Oct 2021 03:28 PM
‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு இணையவழி விழிப்புணர்வு உரையரங்கம்
சென்னை:
‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு, அனைவரிடத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு உரையரங்கம் இன்று (அக்.29) மாலை 4 மணிக்கு இணையம் வழியே நடைபெற உள்ளது.
‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக்-26 முதல் நவ-1 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, இந்தியன் வங்கி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து ‘சுதந்திர இந்தியா @ 75 : நேர்மையுடன் கூடிய தற்சார்பு’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் இணையவழி விழிப்புணர்வு உரையரங்கத்தை நடத்துகின்றன.
இதில், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா, சென்னை செட்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் என்.சரத் சந்திர பாபு, சென்னை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் செனாய் விஸ்வநாத்.வி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00084 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.
WRITE A COMMENT
Be the first person to comment