Published : 28 Oct 2021 08:32 AM
Last Updated : 28 Oct 2021 08:32 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வு பள்ளிக்கல்வி அமைச்சர் இன்று காலை தொடங்கி வைக்கிறார்
சென்னை. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வினை இன்று (அக்.28) காலை 11 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் இந்த இணைய வழி தொடர் நிகழ்வை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, கலெக்ட்டிவ் குட் பவுண்டேஷன், அவ்வை வில்லேஜ் வெல்ஃபர் சொஸைட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று (அக். 28, வியாழன்) காலை 11 மணிக்கு சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தலைமையேற்று, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்
இந்த தொடர் நிகழ்வில் ‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில், கொரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் குறித்தும், தனிநபர் சுத்தம், கழிப்பறை சுத்தம், பாதுகாப்பான - சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், வாழ்வில் இவற்றை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணரும் வகையிலும் படக்காட்சிகளுடன் கூடிய சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் மாணவ-மாணவிகள் மனதில் பதியுமாறு விளக்கப்படவுள்ளன. மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் இந்த சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்வினைப் பார்த்து பயன்பெறும் வகையில் வரும் நவம்பர் தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இணைய வழி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்வை https://www.htamil.org/00091 , https://www.htamil.org/00092 ஆகிய யூ-டியூப் லிங்க்-களில் நேரலையில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment