Published : 08 Sep 2021 08:41 PM
Last Updated : 08 Sep 2021 08:41 PM
டாக்டர் காமாட்சி இன்ஸ்டியூட் ஆப்மெடிக்கல் சயின்ஸ் & ரிசர்ச் (KIMSR ) தரமான மருத்துவக்கல்வியை வழங்கும்பொருட்டு 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் நோக்கமான சிறந்த ஆரோக்கியம் அனைவருக்கும் கிடைக்கப் பெறவேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்கான ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் T.G. கோவிந்தராஜன் அவர்களால் நிறுவப்பட்டு 75 ஆயிரம் சதுர அடியில் 300 படுக்கைகள் கொண்ட பல்துறை சிறப்பு மருத்துவமனையாக பள்ளிக்கரணையில் இயங்கிவருவது டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை. இம்மருத்துவமனை, KIMSR மூலம் முறையாக திட்டமிடப்பட்ட பாடங்கள், அனுபவமிக்க ஆசிரியர்களின் மூலமாக தரமான கல்வி மற்றும் நேரடி செயல்முறை பயிற்சிவகுப்புகள் என்று மருத்துவக்கல்வியை மாணவர்களுக்கு அளித்துவருகிறது.
இளநிலை பட்டப்படிப்புகள்
KIMSR டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வியகம். இங்கே
* பிஎஸ்சி ரேடியோகிராபி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி( RIT, 3 வருடங்கள்)
* பிஎஸ்சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி (MLT, 3 வருடங்கள்)
* பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி (3 வருடங்கள்)
போன்ற இளநிலை பட்டப் படிப்புகளும் லேட்ரல் என்ட்ரி வசதியுடனும் நடத்தப்படுகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள்
- எம்எஸ்சி ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி (RIT, 2 வருடங்கள்) இந்தப் பட்டப் படிப்பை தமிழ்நாட்டில் முதன்மையாக நாங்கள்தான் வழங்குகிறோம். செயல்முறையுடன் கூடிய சிறப்பான பாடதிட்டங்கள் கொண்ட இப்படிப்பை முடித்த எங்கள் மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப் பெற்றுள்ளனர்.
RIT மற்றும் RTT படிப்புகள் இந்திய அரசின் அடாமிக் எனர்ஜி ரெகுலேட்டரி போர்டின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த படிப்பை போதிக்கும் ஆசிரியர்கள் நீண்ட அனுபவமும் ஆழ்ந்த புலமையும் கொண்டு மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். இந்த வருடம் மாணவர்கள் ரேடியாலஜி துறையில் பொருத்தப்பட உள்ள லீனியர் ஆக்ஸிலரேட்டரில் நேரடி பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லீனியர் ஆக்ஸிலரேட்டர் ரேடியோதெரபியில் புதிய பாதையை வகுக்க போகும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
D.சுரேந்தர், எம்ஆர்ஐ டெக்னாலஜிஸ்ட்,ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், துபாய், யுஏஇ
நான் 2016 ஆம் ஆண்டு டாக்டர் காமாட்சி இன்ஸ்டியூட்டில் என் பட்டப்படிப்பை முடித்தேன். இங்குதிறமையும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களும் தரமான கல்வியும் நவீன தொழில்நுட்பகருவிகள் மூலம் சிறந்த தொழில்நுட்ப செயல்முறை கல்வியும் உள்ளதால் மாணவர்களை திறமையானவர்களாக உருவாக்க முடிகிறது. இந்த இன்ஸ்டியூட்டில் படித்த மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைகொள்கிறேன். அதுமட்டுமின்றி நான் அனைத்து மாணவர்களுக்கும் இந்த இன்ஸ்டியூட்டை பரிந்துரை செய்கிறேன். ஏனென்றால் நான் மட்டுமல்ல இங்கு படித்த பலரும் இன்று உலகம் முழுவதும் பலநாடுகளில் நல்லவேலையில் இருக்கின்றனர்.
பட்டயப் படிப்புகள்
இங்கு எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு இரண்டு வருட பட்டயப் படிப்புகளும் உள்ளன.
- டயாலிசிஸ் டெக்னாலஜி (பிஎஸ்எஸ்கல்விதிட்டத்தின்கீழ் )
- மெடிக்கல் லேப் டெக்னாலஜி
- பிசியோதேரபி அண்ட் ஆக்குபேஷனல் தெரபி
- ஹாஸ்பிடல் டாக்யூமண்டேஷன் அண்ட் ரெக்கார்டு மேனேஜ்மென்ட்
- பேஷன்ட் கேர் அசிஸ்டன்ட்
முதுநிலை பட்டப்படிப்புகள்
எம்பிபிஎஸ் முடித்த பட்டதாரிகள் முதுநிலை துணை மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்பினால் இங்கு அதற்கான பல படிப்புகள் உள்ளன. டிஎன்பி பட்டய படிப்புகள்- ரேடியோ டயக்நோசிஸ், ஃபேமிலி மெடிசன், அனஸ்தீசியாலஜி போன்ற பிரிவுகளிலும் டிஜிஓ (என்பிஈ) மகப்பேறு & மகளிர் மருத்துவம் பிரிவிலும் இங்கு படிக்கலாம். இங்கு படித்த பல மாணவர்கள் நாட்டின் பல பெரிய மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
குறுகியகால படிப்புகள்
மேற்கூறிய படிப்புகளைத் தவிர இங்கு பயோமெடிக்கல் இன்ஜினியரிங், நர்சிங், மெடிகல் பிசிக்ஸ் போன்ற குறுகிய கால படிப்புகளும் நடத்தப்படுகிறது. இதைத்தவிர துணைமருத்துவப்படிப்புகளின்முனைவர் பட்டத்திற்கான உதவிகளும் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்படுகிறது.
நேரடி செயல்முறை பயிற்சிகள் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களுக்கு வழங்கப்படுகிறது
- பெட் / சிடி/ எம்ஆர்ஐ ஸ்கேன்
- டாப்ளர்
- அல்ட்ரா சவுண்ட்
- ரேடியோதெரபி (லீனியர் ஆக்ஸிலரேட்டர்)
P.தாமரை செல்வன், ரேடியேஷன் தெரபிஸ்ட்,TCCEC, ஆன்டிகுவா வெஸ்ட் இண்டீஸ்
பி.எஸ் .சி ரேடியேஷன் டெக்னாலஜி படிப்பு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய ஒரு படிப்பாகும். ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்பு புற்று நோயை குணப்படுத்த உதவும் ஒரு படிப்பாகும். இந்தப் படிப்பிற்கு உலகம் முழுவதும் பல வாய்ப்புகள் உள்ளன. நான் டாக்டர் காமாட்சி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்வியகத்தில் இந்த படிப்பை முடித்தேன். இங்கு செயல்முறை பயிற்சிகள் பெறுவதற்கு நிறைய வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. நன்றி.
J. ஆறுமுகம் சீனியர் டெக்னாலஜிஸ்ட் / ஆர்எஸ்ஓ, டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனை
நான் 2011 - 14 ஆம் ஆண்டுகளில் பிஎஸ்சி ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி படிப்பை டாக்டர் காமாட்சி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்சில் முடித்தேன். இங்கு எனக்கு திறமையான அனுபவமிக்க பேராசிரியர்கள் மூலம் பல விஷயங்களை இந்த துறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ரேடியாலஜி மற்றும் பௌதிகத்தில் திறமையான வழிகாட்டுதலை நான் இங்கு பெற்றேன். இதனால் என்னுடைய தொழில்சார் அறிவு மேம்பட்டது. செயல்முறை பயிற்சியும் சிறப்பாக கிடைத்தது. இது எனக்கு வாழ்க்கையில் மேலும் முன்னேறும் தன்னம்பிக்கையை கொடுத்தது.
KIMSR அளிக்கும் உத்திரவாதம்
- தரமான நியாயமான கட்டணத்துடனான கல்வி
- 75 ஆயிரம் சதுரடியில் 300 படுக்கை வசதிகள் கொண்ட உலகத் தரத்திலான வசதிகள் கொண்ட மருத்துவமனையும் நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்ட பயிற்சி பெறும் இடம்
- திறமையும் கல்வித் தகுதியும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களும் நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகளும்
- இமேஜிங் டிவைசஸ் மற்றும் ரேடியோதெரபி டெக்னாலஜியை நேரடியாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
- வேலைக்கான உத்தரவாதமும் உலகில் உள்ள முதன்மையான மருத்துவமனைகளில் வேலை பெறுவதற்கான உதவிகளும் கிடைப்பது.
இங்கு படித்த மாணவர்களின் ஒப்புதல் கூற்றுகள் இந்த இன்ஸ்டியூட்டின் தரத்தையும் சிறப்பையும் எடுத்துக்கூறுகிறது என்பது மிகையல்ல.
மேலும் விபரங்கள் பெற www.kmhinstitute.com என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT