Published : 05 Aug 2021 12:36 PM
Last Updated : 05 Aug 2021 12:36 PM

நுரையீரல் மற்றும் கல்லீரலில் பரவும் புற்றுநோய்க்கு அதிநவீன துல்லிய ரேடியோதெரபி சிகிச்சை

அழையா விருந்தாளியாக வரும் புற்றுநோயை நுண்மையான சிகிச்சைகள் மூலம் ஆரோக்கியமான செல்களை விடுத்து பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் தாக்கி அழித்து குணமாக்குகிறார்கள் மருத்துவர்கள். இருந்தாலும் சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் கழித்து வேறு இடங்களில் புற்று தோன்றுகிறது. இது மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் எலும்புகளில் பரவலாம். இருந்தாலும் இம்மாதிரியான நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது டார்கெட்டட் ரேடியோதெரபி என்று கூறிய டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் மருத்துவர் J. சுரேந்திரன் அவர்கள் இச்சிகிச்சையை பற்றியும், மேலும் உள்ள நம் சந்தேகங்களுக்கும் கூறிய விளக்கங்கள் பின்வருமாறு,

கே: குணமாகிய பின்பு புற்று நோய் திரும்பவும் வருமா?

ப: வரலாம் என்பதே உண்மை என்றாலும் முதல் கட்ட சிகிச்சைக்கு பின்பு முறையான அவ்வப்போதைய மருத்துவர் மற்றும் ஆய்வக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் திரும்பவும் வருவதை உடனடியாக கண்டு பிடித்து முழுமையாக குணப்படுத்த முடியும். மார்பகம், மலக்குடல், கருப்பைவாய் மற்றும் சுக்கிலசுரப்பி (ப்ரோஸ்டேட்) புற்றுநோய்களுக்கு முதல் கட்டமாக அறுவைசிகிச்சை, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மூலம் நோயை குணப்படுத்தி இருந்தாலும் சில நோயாளிகளுக்கு சில வருடங்களுக்கு பிறகு முதலில் பாதிக்கப்பட்ட இடங்கள் இல்லாமல் வேறு உறுப்பிலோ வேறு இடத்திலோ புற்று தோன்றலாம். ஒருவர் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டார் என்பதை எப்போது ஊர்ஜிதப்படுத்த முடியும் தெரியுமா? புற்றுநோய் செல்கள் எல்லாம் முழுமையாக நீக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டபின்போ பல ஆண்டுகள் கழிந்தும் மீண்டும் வளராமல் இருந்தால் அதையே முழுமையான குணம் எனலாம். அதனால் தான் முதல் கட்ட சிகிச்சைக்கு பின்பு குறைந்தது 2 முதல் 5 வருடங்கள் வரையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு வர சொல்கிறோம். இதனால் ஏதேனும் புற்றுநோய் செல்கள் புதியதாய் தோன்றினாலும் உடனே அதை அகற்றி குணப்படுத்தி விட முடியும்.

கே: புற்று நோய் திரும்ப வந்தால் அதை குணப்படுத்த முடியுமா?

ப: கண்டிப்பாக முடியும். இரண்டாவதாக வேறு இடங்களில் தோன்றும் புற்று பெரும்பாலும் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் முதுகுத்தண்டின் பக்கவாட்டில் தோன்றும். முன்பெல்லாம் இம்மாதிரி தோன்றும் புற்றை நான்காம் நிலை என்று வகைப்படுத்தி அது குணப்படுத்த முடியாதது என்று கை விரித்து விடுவர் மருத்துவர்கள். ஆனால் தற்போது இம்மாதிரி திரும்ப வருவதை கீமோதெரபி மூலமும் அது முடியாவிட்டால் நிச்சயமாக ரேடியோதெரபி மூலமும் குணபடுத்திவிடமுடியும் என்பது நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகும்.

கே: எந்த மாதிரியான ரேடியோதெரபி இந்த நிலையில் பயன்படுத்தப்படுகிறது?

ப: நுரையீரல், கல்லீரல் மற்றும் முதுகெலும்பின் பக்கங்களில் ஏற்படும் புற்றை குணமாக்க SBRT(ஸ்டீரியோடேக்டிக் பாடி ரேடியோதெரபி) என்ற சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. SBRT என்பது மிகவும் துல்லியமான அளவில், மிக நுணுக்கமாக கதிவீச்சுகளை செலுத்தி கட்டிகளை முழுவதுமாய், பக்கத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல், அகற்றும் சிறப்பு கதிர்வீச்சு சிகிச்சையாகும்.

கே: SBRT சிகிச்சையை பயன்படுத்தக்கூடிய சரியான நேரம் எது?

ப: மீண்டும் வரும் புற்றுநோய் வளர்ச்சி மூன்றிற்கும் குறைவான இடங்களில் ஐந்து சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகளில் தோன்றினால் கூட அதை SBRT சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். இருந்தாலும் புற்றுநோய் வளர்ச்சி இரண்டு சென்டிமீட்டருக்கும் குறைவாக இருந்து, ஒரு உறுப்பின் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே இருந்தால், மிகவும் உறுதியாக அதை அழித்து முழுமையான குணம் அளிக்க முடியும். அதே போல் கீமோதெரபி கொடுத்து நோயின் தீவிரத்தை மட்டுமே குறைக்க முடிந்த நோயாளிகளுக்கு SBRT சிகிச்சை கொடுத்து புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்க முடியும்.

கே: SBRT யின் நன்மைகள் என்னென்ன?

ப: இது ஒரு புறநோயாளி சிகிச்சை முறை. உடலுக்குள் ஊடுருவுதல் ஏதும் இன்றி செய்யக்கூடியது. ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் மூன்று முதல் ஐந்து தடவைகள் கொடுக்கக்கூடியது. இது மிகவும் துல்லியமாக புற்றுநோய் செல்களை மட்டுமே தாக்கி அழிப்பதால், ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாமல், விரைவான குணம் கிடைக்கிறது.

கே: டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் SBRT சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

ப: எங்கள் மருத்துவமனையில் விரைவில் நிறுவப்படவுள்ள லீனியர் ஆக்சிலரேட்டர், நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவியாகும். மேலும் இதனுள் ஆக்டிவ் பிரீதிங் கோஆர்டினேட்டர்(ABC) மற்றும் மாடரேட் டீப் இன்ஸபிரேஷன் ப்ரெத் ஹோல்ட் டெக்னீக் (mDIBH) இருப்பதால் நோயாளி பாதுகாப்பாகவும் வசதியாகவும் சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியும். லீனியர் ஆக்சிலரேட்டரின் உயர்தர தொழில்நுட்பம் மூலம் சிறப்பான சிகிச்சையை அளிக்கமுடியும்.

நம் கேள்விகளுக்கு விடையளித்த டாக்டர்.சுரேந்தர் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை வல்லுனரான இவர் இத்துறையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் இவர் நமக்கு ப்ரோஸ்டேட் புற்று பற்றிய தகவல்களையும் அதற்கான கதிர்வீச்சு சிகிச்சை பற்றியும் விளக்கம் அளிப்பார்.
மற்ற புற்றுநோய் பற்றிய சந்தேகங்களுக்கு மருத்துவர் சுரேந்திரன் அளித்த பதில்களை படிக்க கீழே கிளிக் செய்யவும்

மூளை புற்றுநோய்
https://www.hindutamil.in/news/brandhub/693409-concentrated-radiation-special-treatment-for-brain-cancer.html

மார்பகப் புற்றுநோய்
https://www.hindutamil.in/news/brandhub/696447-safe-radiation-therapy-for-breast-cancer.html

உங்களின் கேள்விகளை kv@drkmh.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x