Published : 16 Jul 2021 05:16 PM
Last Updated : 16 Jul 2021 05:16 PM

இனி கவலையில்லை; புற்றுநோயிலிருந்து விடுதலை புற்றுநோய்க்கான சிகிச்சை குறித்த விளக்கங்களை அளிக்கிறார்கள் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள்

மக்கள் மத்தியில் புற்றுநோய் என்றதுமே இன்னமும் ஒருவித அச்சம் நிலவுகிறது. புற்றுநோய் வந்தால் அதைக் குணப்படுத்த முடியாது, உயிரிழப்பு ஏற்படும் என்கிற எண்ணமும் உள்ளது. இன்றைக்கு நவீன அறிவியல் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. மருத்துவத் துறையிலும் நவீன வசதிகளுடன்கூடிய கருவிகள் உபகரணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னரே, புற்றுநோய் எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பதை கண்டறிய முடியும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்டோஸ்கோபி எனும் நவீன கருவி மூலமாக, அறுவை சிகிச்சை இல்லாமலேயே புற்றுநோயின் பாதிப்பை எளிதில் கண்டறிந்து விடலாம். மேலும், தற்போதுள்ள நவீன மருத்துவச் சிகிச்சை முறையைக் கையாள்வதன் மூலமாக புற்றுநோயின் தாக்குதலிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த பயம் தேவையில்லை. முறையான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாக புற்றுநோயை நம்மால் வெல்ல முடியும் என்கிறார்கள் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள்.

கோவையின் புகழ்மிக்க மருத்துவமனையான ஜெம் ஹாஸ்பிடல், ‘இந்து தமிழ் திசை’, நாளிதழுடன் இணைந்து வழங்கும் ‘நலமாய் வாழ...’ எனும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில், ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் சிறப்பு ஆலோசனை நிகழ்வை ஆன்லைன் வழி நடத்தவுள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வு வரும் ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், மருத்துவத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்கவரும், லேபராஸ்கோபி சிகிச்சை முறையை முதன்முதலாக தமிழகத்தில் அறிமுகம் செய்தவரும், கோவை ஜெம் ஹாஸ்பிடலின் சேர்மனுமான புகழ்பெற்ற டாக்டர் சி.பழனிவேலு, ‘புற்றுநோயின் தாக்கம்’ எனும் குறித்தும், சித்த மருத்துவத்தில் 25 ஆண்டுகால அனுபவமிக்கவரும், ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் கு.சிவராமன், ‘வெல்ல முடியும் புற்றுநோயை’ என்பது குறித்தும், 18 ஆண்டுகால அனுபவமிக்க குடல்புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.செந்தில்நாதன், ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்...’ எனும் தலைப்பிலும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3ysukbk என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x