Published : 23 Oct 2020 03:23 PM
Last Updated : 23 Oct 2020 03:23 PM
சென்னை
‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஆன்லைன் குவிஸ் போட்டியில் பங்கேற்க பதிவுசெய்து கொள்ள கடைசி தேதி அக்டோபர் 28 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’ அக்டோபர்-27 முதல் நவம்பர்-2 வரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ‘விழிப்பான இந்தியா; வளமான இந்தியா’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் ‘என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் குவிஸ் போட்டியை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். 5, 6, 7-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். ஜூனியர்களுக்கான போட்டி அக்டோபர் 29-ம் தேதியும், சீனியர்களுக்கான போட்டி அக்டோபர் 30-ம் தேதியும், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான இறுதிப் போட்டி அக்டோபர் 31-ம் தேதியும் நடைபெறும். இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புபவர்கள் பதிவு செய்துகொள்ள CLICK HERE.
குவிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள் மற்றும் தலைப்புகள் / பாடங்கள் ஆன்லைன் இணைப்பில் வழங்கப்படும். பதிவு செய்துகொள்ள கடைசி தேதி அக்டோபர் – 28. இந்த நிகழ்வின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் குவிஸ் ஐடி இணைந்துள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389, 9003196509 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT