Published : 21 Mar 2025 07:32 AM
Last Updated : 21 Mar 2025 07:32 AM

சென்​னை​யில் இன்று காலை 10 மணிக்கு ‘இந்து தமிழ் திசை - வாசிப்பை நேசிப்​போம்’ நிகழ்வு

சென்னை: இன்​றைய இளைய தலை​முறை மாணவர்​களிடம் கல்​வி​யின் முக்​கி​யத்​து​வத்​தை​யும், புத்தக வாசிப்​பின் அவசி​யத்​தை​யும் வலி​யுறுத்​தும் வகை​யில் எஸ்​எஸ்​எல்​எஃப் எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - வாசிப்பை நேசிப்​போம் எனும் நிகழ்வு இன்று (மார்ச் 21, வெள்​ளிக்​கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வண்​டலூரில் உள்ள பி.எஸ்.அப்​துர் ரஹ்​மான் கிரசென்ட் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி அரங்​கில் நடை​பெறுகிறது.

ஒவ்​வொரு தனிமனிதனின் வளர்ச்​சிக்​கும் புத்தக வாசிப்பு மிக​வும் அவசி​ய​மானது. நவீன அறி​வியல் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யின் காரண​மாக இன்​றைய தலை​முறை மாணவர்​கள் புத்தக வாசிப்​பில் பெரிதும் ஆர்​வ​மின்றி இருக்​கின்​றனர். புத்தக வாசிப்​பின் வழி​யாகத்​தான் புதிய உலகைக் காண முடி​யும், புதிய சிந்​தனை​கள் பிறக்க முடி​யும்.

புத்தக வாசிப்பு பழக்​கத்தை மாணவர்​களிடம் கொண்டு செல்​லும் முயற்​சி​யாக முன்​னெடுக்​கப்​படும் இந்த நிகழ்​வில், செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.அருண்​ராஜ், எஸ்​எஸ்​எல்​எஃப் கல்வி அறக்​கட்​டளை நிறு​வனர் ஜி.சக்​திவேல், கல்​வி​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான பேராசிரியர் ஏ.முகமது அப்​துல்​காதர் ஆகியோர் பங்​கேற்​று, கருத்​துரை​யாற்ற உள்​ளனர். புத்தக வாசிப்​பின் அவசி​யத்தை அறிந்​து​கொள்ள விரும்​பும் அனை​வரும் இந்த​ நிகழ்​வில் பங்​கு பெற்று பயன்​பெறலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x