Published : 24 May 2024 05:33 PM
Last Updated : 24 May 2024 05:33 PM
சென்னை: ‘அன்பாசிரியர் 2023’ விருதுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கப் பெருமையுடன் காத்திருக்கிறது. மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல், மாறுபட்ட சிந்தனையோடு, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே ‘அன்பாசிரியர்’ விருது. இந்த விருதினைப் பெற விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் ஜூன் 15 வரை என றிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, கடைசி தேதி வரும் ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் இணைந்து வழங்குகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.
தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும்நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம்.
அன்பாசிரியர் தேர்வு முறை
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல் கட்ட நேர்காணல் ஆன்லைன் வழி நடைபெறும்.
தங்களது அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் முதல் கட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நேரில் நடத்தப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் / வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
இணையம் வழியில்விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் https://www.htamil.org/AA2023 என்னும் இணைய வழியில் அல்லது அருகில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு
திரு. மு.முருகேசன் - 7401329364
மின்னஞ்சல் முகவரி: murugesan.m@hindutamil.co.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.06.2024
இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்ப படிவத்தை https://www.htamil.org/AAFORM என்ற லிங்கின் மூலம் டவுன்லோட் செய்து, ‘அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு, மேற்சொன்ன ஆதாரங்களின் நகலுடன் வரும் ஜூன் 255 - ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி - அஞ்சல் வழியாக அனுப்பலாம். அதிகமான தகவல்கள் இருப்பின் தனிக் காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT