Published : 03 Jan 2024 06:30 AM
Last Updated : 03 Jan 2024 06:30 AM

சுந்தரம் ஃபைனான்ஸ் ‘மயிலாப்பூர் திருவிழா’ - நாளை முதல் விமரிசையாக நடைபெறுகிறது

சென்னை: சென்னையில் பிரபலமான சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ‘மயிலாப்பூர் திருவிழா-2024’ நாளை (ஜன.4) முதல்நடைபெறுகிறது. இதுதொடர்பாக இந்நிகழ்ச்சியின் இயக்குநர் வின்சன்ட்டிசெளசா, செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20-வது ‘மயிலாப்பூர் திருவிழா’ நாளை முதல் (ஜன.4) 7-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெகு விமரிசையாக மயிலாப்பூரில் கொண்டாடப் பட உள்ளது. இந்த திருவிழாவில் நடனம், இசை, நாட்டுப்புறகலைகள், கோலப் போட்டிகள், ரங்கோலி சித்திரங்கள், சமையல், பல்லாங்குழி, தாயக்கட்டம், சதுரங்கம் உட்படமொத்தம் 40 வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதி தெருக்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. திருவிழாவின் தொடக்கமாக 60 குழந்தைகள் பங்கேற்கும் இசை கச்சேரி நாகேஷ்வர ராவ் பூங்காவில் நாளை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

சென்னை மாநகரின் அறுசுவை உணவுகளை அனுபவிக்கும் வகையிலான உணவு திருவிழாவும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக ‘பிளாஸ்டிக்பைகளை தவிர்ப்போம்’ என்றகருப்பொருளுடன் 10 ஆயிரம்துணிப்பைகளை மயிலாப் பூரில் வசிக்கும் மக்களுக்கு வழங்க இருக்கிறோம்.

மயிலாப்பூரின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கும் பங்களித்த தனிநபர் அல்லது அமைப்புக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ என்ற சிறப்பு சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.

மக்களை குடும்பம் குடும்பாக ஒருங்கிணைத்து விளையாட்டுகளில் பங்கேற்க செய்வதை நோக்கமாகக் கொண்டுஇத்திருவிழா நடத்தப்படு கிறது. மக்கள் வீட்டை விட்டுவெளியே வந்து நமது பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியமானது. பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் திருவிழா அமைந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x