Published : 31 Oct 2023 06:00 AM
Last Updated : 31 Oct 2023 06:00 AM
சென்னை: புகழ்பெற்ற வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (VIT) வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘நாளைய விஞ்ஞானி 2023’ எனும் அறிவியல் நிகழ்வு இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையிலும் 2019-ம் ஆண்டு ‘நாளைய விஞ்ஞானி’ எனும் சிறப்புமிக்க நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது.இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளின் (அரசு / மெட்ரிக் / சிபிஎஸ்இ)மாணவ -மாணவிகளும் பங்கேற்கலாம்.
பங்கேற்பது எப்படி? - மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும். அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். மாணவர்கள் கண்டறிந்த புதுமைகளை ஆய்வு அறிக்கையாக தயாரிக்க வேண்டும்.
# இளநிலைப் பிரிவில் 8, 9, 10-ம்வகுப்பு மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.
# தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தனித்தனி அமர்வில் ஆய்வைச் சமர்ப்பிக்கலாம்.
# ஒரு குழுவில் 3 முதல் 5 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டிஆசிரியர் ஒருவரும் இருக்கலாம்.
# பங்கேற்க விரும்பும் மாணவர்கள், நவம்பர் 24-ம் தேதிக்குள், பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியன இணைந்துள்ளன.
வரும் டிசம்பர் மாதத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மண்டல அளவிலான ஆய்வுசமர்ப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறும். அதிலிருந்து இறுதிப் போட்டிக்குத் தேர்வான மாணவர்கள், டிசம்பர் இறுதியில் வேலூர் விஐடிவளாகத்தில் நடைபெறும் மாநிலஅளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்பர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத் திருக்கின்றன.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/NV2023 என்ற லிங்கில் பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். இன்றே பதிவு செய்யுங்கள்… உங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT