Published : 30 Jun 2023 04:55 PM
Last Updated : 30 Jun 2023 04:55 PM

திருச்சியில் ஜூலை 8 அன்று ‘இந்து தமிழ் திசை’ - மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ‘எம்எஃப் மந்த்ரா’ நிகழ்வு

‘இந்து தமிழ் திசை’ - மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து வழங்கும் ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு வரும் ஜூலை 8 அன்று திருச்சியில் நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பல்வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கும் பெண்களுக்கு வழிகாட்டும் வகையிலுமான நிகழ்வுகளை கள அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘எம்எஃப் மந்த்ரா’ எனும் ‘முதலீடும் முன்னேற்றமும்’ என்கிற பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு நிகழ்வினை திருச்சியில் நடத்துகிறது. இந்த சிறப்பு நிகழ்வு வரும் 2023 ஜூலை 8 (சனிக்கிழமை) அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெறுகிறது.

காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில், பரஸ்பர நிதியில் பெண்கள் முதலீடு செய்வது குறித்தும், அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபத்தை ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், எழுத்தாளரும், மனித வள மேலாண்மை பயிற்றுநருமான சோம.வள்ளியப்பன், பட்டய கணக்காளர் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றவரும், நிதியியல் நிபுணரும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி ஆலோசகராகவும் செயலாற்றி வரும் ராஜீ ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனர். இந்த நிகழ்வில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயது பெண்களும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண்கள் https://www.htamil.org/MFMANTRA என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம் அல்லது இத்துடன் உள்ள கியூஆர்கோடு மூலமாகவும் பதிவுசெய்து பங்கேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x