Published : 21 Oct 2017 04:27 PM
Last Updated : 21 Oct 2017 04:27 PM
விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி பற்றிய வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரி வருகின்றனர். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
அம்மு ஜனனி
முன்னெல்லாம் ஒரு படத்துக்கு ஆளும் கட்சில இருந்து எதிர்ப்பு வரும்... இப்ப என்ன ஆளே இல்லாத கட்சில இருந்து எதிர்ப்பு வருது...!!
Kamali Panneerselvam
விஜய்யின் மெர்சல் படத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு.. என்னய்யா நடக்குது?
ஒரு தமிழ் மசாலா படத்தை பற்றி அகில இந்திய அளவில் பரபரப்ப கிளப்புறீங்க. அர்ஜூன் 'முதல்வன்' படத்தில், கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே என்ற டயலாக் போல, கமல், ரஜினி என ஏற்கனவே அரசியல் பேசியவர்களால் தமிழ்நாடு மிரண்டு இருக்க புதுசா இவரையும் அரசியல் பேச வச்சிடுவீங்க போலவே...
Kavin Malar
மெர்சல் படத்தில் 'இப்போ கோயில் கட்டி என்ன பண்ணப் போறோம்? நம்ம ஊரில் ஆஸ்பத்திரி கட்டுவோம்' என்று சொல்வார் விஜய். அதற்கு எச்.ராஜாவின் பதிலைப் பாருங்கள்..
// தமிழகத்தில் கடந்த 20 வருடங்களில் கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதைத் தவிர்த்து மருத்துவமனை கட்டணும் என்கிறார் விஜய் //
தடுக்கி விழுந்தா முக்குக்கு முக்கு பிள்ளையார் கோயில் தமிழ்நாட்டில் முளைச்சுக் கிடக்கு. கோயில் நகரம்னு இதுல சில ஊர்களுக்குப் பெருமை வேற. சர்ச் நகரம், மசூதி நகரமெல்லாம் நாங்க இதுவரை கேள்விப்படலை. இதில் இந்த புள்ளிவிவரத்தைப் பார்த்தால்...
Hansa Hansa
ஜிஎஸ்டி பத்தி தவறான தகவல் கொடுத்ததுக்காக கோவப்படறாங்க போல-ன்னு நினச்சேன்.
இல்லியாம்.
ஜிஎஸ்டி பத்தி பேசினதுக்காகவே கோவப்பட்டிருக்காங்க.
Ag Sivakumar
அமைதியா இருந்திருந்தா தீபாவளிக்கு மட்டும் கல்லா கட்டிட்டு போயிருக்க வேண்டிய படம். தமிழிசை பெரிசுபடுத்தி விட்டதால நேஷனல் லெவலுக்கு போயிடுச்சி. ரெண்டு நாளா இந்தியாவோட எல்லா செய்தி சேனல்லயும் பரபரப்பு செய்தியா ஓடிட்டு இருக்கு. அடுத்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து சொல்வார் போல.
Nelson Xavier
மெர்சல் படக் காட்சிகளை நீக்க கூடாதென அஜித் ரசிகர்களின் பதிவுகளையும் மீம்களையும் பரவலாக பார்க்க முடிகிறது. இதற்கு மேலுமா சினிமா ரசிகர்களுக்கு அரசியல் தெளிவில்லை என்று சொல்கிறீர்கள். கலைப் போட்டிக்கும் அரசியல் ஆட்டத்துக்குமான தெளிவான வித்தியாசத்தை நுட்பமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். விசில்களின் சத்தம் திரையை ரசிக்க மட்டுமில்லை, சில நேரங்களில் திரையை கிழிக்கவும் செய்யும்.
D S Gauthaman
மெர்சல் படத்துக்கு பெரிய அளவில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கலைன்னு பதட்டத்தோட இருந்த படக்குழுவின் நெஞ்சில் பால் வார்த்தது போல மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கக்கோரி வழக்கு தொடுப்பேன்னு தமிழிசை சொல்லியிருக்காங்க! இனி இதை வச்சே பெரிய ஹிட் ஆக்கிடுவாங்க!
Nambikai Raj
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் "கோயில் கட்டுவதற்கு முன் மருத்துவமனை கட்ட வேண்டும்" என வசனம் பேசுவார். அதற்கு பக்தகோஷ்டிகள் இந்துக்கள் மனதை புண்படுத்திட்டார் ஜோசப் விஜய் என கொதிக்கிறார்கள்.
கோயிலுக்கு பதில் கழிப்பறை கட்டுங்கள் என சொன்னவர் மோடி. இதற்கு என்ன சொன்னார்கள்?
Ezhilan M
கடைசியில மோடிக்கு ராகுல்காந்தி அறிவுரை சொல்ல வைத்ததுதான் மெர்சல் சாதனை போல!
Rajeswari Jayakumar
எப்படி பார்த்தாலும் மருத்துவத் துறைதான் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்கனும். வாழ்க்கையில் மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். நான் எல்லாம் தவறான சிகிச்சையால் இரண்டு முறை செத்து பிழைத்து வந்திருக்கிறேன்.
அல்ட்ரா விக்னேஷ்
அஜித் ரசிகர்களே விஜய்க்கு சப்போர்ட் பண்றது மெர்சல் படத்துக்குதான். ஏன்னா.. நாங்க மொத திராவிடர்கள். அப்பறம்தான் இந்த அஜித் விஜய் பேன்ஸ்லாம்.
Piriyan Poet
ஒத்தப் படத்தப் பத்திப்பேசி உசுப்பேத்தி விட்டீக..
வசூல் நெறைய வைச்சீக..
ருசி பாத்தான் கலைஞன்..
இனி பத்துப்படம் அடுத்து வருமே என்ன செய்வீக..
பட்டையத்தான் கெளப்புவாய்ங்க எங்க போவீக..
மளிகை கடைக்காரன் @ibrahim_siraj
மீண்டும் தணிக்கை செய்ய வேண்டியது, ஜிஎஸ்டியிலுள்ள பிரச்சனைகளே தவிர மெர்சல் படமில்லை - டெல்லி துணை முதல்வர்.
Rajan Kurai Krishnan
மெர்சல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி, டிமானிடைசேஷன் காட்சிகள் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தது காமெடி சீன் போல வேடிக்கையாக தெரிந்தது. இப்போது அந்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் இசைந்துள்ளார் என்று கேள்விப்படும்போது விபரீதமாகத் தெரிகிறது. பாஜக என்னவகையான கட்சி என்றே புரியவில்லை. சினிமா வசனங்களையெல்லாம் கண்டிக்கும் அளவுக்கா ஒரு தேசிய கட்சி செயல்படும்?
மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு. தயாரிப்பாளர் எதனால் அஞ்சுகிறார் என்பதை யோசித்தால் மத்திய அரசு எவ்வளவு தூரம் ப்ளாக்மெயிலை நம்பி செயல்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம்.
Boopathy Murugesh
மெர்சலுக்கு ராகுல் காந்தி ஆதரவு - கடைசில விஜய் அண்ணா டிரம்போட பேசுற மாதிரி மதுரை ரசிகர்கள் பண்ண போட்டோஷாப் உண்மையாகிடும் போலவே.
Araathu R
விஜய் சினிமாவில் அரசியல் பேசுவது எவ்வளவு காமெடியோ, அந்த காமெடிக்கு சற்றும் குறைந்ததல்ல, தமிழக பாஜக இந்த படத்தை எதிர்ப்பது. மத்திய அரசால், ஒரு சின்ன இன்கம்டாக்ஸ் ரெய்ட் மூலம் இந்த நடிகர்களை தொடை நடுங்க வைத்து வழிக்கு கொண்டு வந்து விட முடியும்.
இதைப்போன்ற நடிகர்கள் ஏதோ ரெண்டு வசனம் திரைப்படத்தில் பேசி விட்டதை புரட்சி என்பதும், அதற்கு எதிர்வினையாக கோமாளிகள் அந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்று சொல்வதை அடக்குமுறை என்பதும் அடர் கருப்பு நகைச்சுவையன்றி வேறென்ன? இதை ஒரு அரசியலாக பார்க்காமல், சாதாரண சினிமா பஞ்சாயத்தாக பார்க்க வேண்டும்.
R T Muthu
விஜய் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ''என் மொழி என் உடைதான் உனக்கு பிரச்சினை எனில், மாற வேண்டியது நான் இல்லை; நீ''
SubaVeerapandian @Suba_Vee
மெர்சல் என்றால் என்ன என்று சிலர் கேட்டனர். அந்தப் படம் பார்த்து மெர்சலாகிப் போயுள்ள பாஜக நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள். சொல்வார்கள்.
விஷ்வா விஸ்வநாத்
ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உண்டு. அது அனுமதித்து சான்றிதழ் வழங்கிய பின்னரே படம் வெளியாகும். அப்படி இருக்க சான்றிதழ் கொடுத்த படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்வது அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தணிக்கை வாரியத்தால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Joseph T V A
அனிதா தற்கொலை- ஊரே கதறுச்சு. பாஜவும் ,மருத்துவர்களும் வேடிக்கை பார்த்தனர்.
மெர்சல்- பாஜகவும், மருத்துவர்களும் கதறுகிறார்கள், மக்கள் சிரிக்கிறார்கள்.
Rohini Rj
எப்பொழுதெல்லாம் பெரிதாக ஒன்று பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் திசை திருப்பப்படுகிறோம் என்பது வேதனை. இதுவரை டெங்குவிற்கு பலியானவர்களின் புள்ளி விபரங்களைக்கூட அறிவிக்காமல் அலட்சியம் காட்டிய அரசை நாமே மறந்துவிட்டு, மெர்சலுக்காக மொழுகிக் கொண்டு இருக்கிறோம்.
மோடி அரசுக்கு சங்கு அடுத்த தேர்தல்ல தானே நடக்கும் ஆனா மாநில அரசை இப்பவும் கேட்காமல் விட்டால் டெங்கு நமக்கு, சங்கு ஊதிட்டு போய்கிட்டே இருக்கும். நேற்று மட்டும் 6 பேர் இறந்திருக்கிறார்கள். இப்ப ட்ரண்ட் பண்ண வேண்டியது டெங்குவிற்கு எதிரான விழிப்புணர்வு, சிகிச்சை குறித்து மட்டுமே. எப்போதும் திசை திருப்பப்படும் தருணங்களில் முட்டாளாக்கப்படுவது மக்களே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT