Published : 04 Oct 2017 09:25 AM
Last Updated : 04 Oct 2017 09:25 AM
கா
ந்தியின் சொந்த வாழ்க்கை தொடர்பான படங்கள் குறைவு. அவற்றில் முக்கியமானது 2007-ல் வெளிவந்த ‘காந்தி, மை ஃபாதர்’. இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகளில் வெளியான படம் இது. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மீது பரிதாபம் கொண்டு மனச் சாய்வுகளுடன் எடுக்கப்பட்ட படமல்ல என்பதாலேயே முக்கியமானதாகிறது இந்தப் படம். ஹரிலாலை அவரது தவறுகளுக்காக வாழ்நாளெல்லாம் மன்னித்துக்கொண்டே இருக்கிறார் காந்தி. குடித்துவிட்டு வரும் மகனைப் பார்த்து குற்றவுணர்ச்சியுடன் ஒடுங்கிப்போய் வருத்தம் மேலிட அமர்ந்திருக்கிறார். கஸ்தூரி பாதான் கடிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
காந்தியால் தேர்வுசெய்யப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவன் படிப்பை பாதியில் கைவிட்டு ஓடிப்போன பின்னர் கிடைக்கப்பெறும் இரண்டாவது வாய்ப்பிலும் அவர் திறனும் அறிவும் கொண்ட மற்றொரு ஏழை மாணவனையே தேர்ந்தெடுக்கிறார். நூறாவது தடவையாக இருப்பினும் அப்படியொரு வாய்ப்புக்காகவே ஏங்கிக் காத்திருக்கும் ஹரிலால் அவரது நினைவுக்குக் கூட வர மாட்டார்.
பிடிவாத நேர்மை கொண்ட பிரபலமான தகப்பனுக்குப் பிறந்த உதவாக்கரை பிள்ளை ஹரிலால். காந்தியின் பிரபல்யத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறத் துடிக்கும்போதெல்லாம் காந்தியே முட்டுக்கட்டையாகிறார். எதனாலும் நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருத்துக்கொண்டே இருக்கின்றன. ஹரிலால் ஓர் அநாதையாகத் தான் சாக வேண்டியிருக்கிறது. ஹரிலால் இறக்கும் தருவாயில் அவரிடம் 'உன் தந்தை யார்?' எனக் கேட்கப்படுகிறது. அவர் 'காந்தி' என்கிறார். 'காந்தி நம் எல்லோருக்கும் தந்தை தான். உன் சொந்தத் தகப்பன் பெயர் என்ன?' எனக் கேட்கிறார்கள். காந்தி நம் அனைவருக்குமானவர் என்பதை உணர்ந்துகொள்ளாததுதான் ஹரிலாலின் ஊழ்.
மறக்க முடியாத படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT