Published : 30 Apr 2023 07:57 AM
Last Updated : 30 Apr 2023 07:57 AM

தொழிலாளர் பிரச்சினையைப் பேசிய தமிழ் நாவல்களில் சில

சுரங்கம்

கு.சின்னப்பபாரதி

பாரதி புத்தகாலயம் வெளியீடு

மேற்கு வங்கத்தில் ஆசன்சோலில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. இந்தப் பகுதியிலுள்ள தொழிலாளர்கள் பிகாஸ் செளத்ரியின் தலைமையில் தனியார் சுரங்கங்களை அரசு மையப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் போராடுகிறார்கள். இது அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் செளத்ரியின் வாழ்க்கை அனுபவங்கள்தாம். சின்னப்பபாரதி கள ஆய்வின் வழி இந்த நாவலை எழுதியுள்ளார்.

உப்பு வயல்

தரகணேசன்

என்.சி.பி.எச் வெளியீடு

தூத்துக்குடி பகுதி உப்பளத் தொழிலாளர்களின் பாடுகளைச் சொல்லும் நாவல் இது. வடுவச்சி என்கிற பெண்ணின் வாழ்க்கையைச் சாரமாக கொண்டு இந்த நாவல் உப்பளத் தொழிலாளர்களின் பாடுகளைச் சொல்கிறது.

கரிசல்

பொன்னீலன்

என்.சி.பி.எச் வெளியீடு

கரிசல் பகுதியில் பெருமாள்புரம் என்கிற சிற்றூருக்கு ஆசிரியர் பணிக்குச் செல்பவரின் அனுபவப் பதிவாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. பொன்னீலன் தன் சொந்த அனுபவத்தில் எழுதிய இந்நாவல் அந்தப் பகுதியில் வேளாண் தொழிற்சங்கங்கள் உருவானதையும் பேசுகிறது.

கரிப்பு மணிகள்

ராஜம் கிருஷ்ணன்

தாகம் வெளியீடு

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கள ஆய்வின் வழி ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் இது. முறையற்ற கூலி, பாதுகாப்பற்ற பணிச் சூழலை மருதம்பா, மாரி, இசக்கி போன்ற கதாபாத்திரங்கள் வழி சித்தரித்த நாவல் இது.

தோல்

டி.செல்வராஜ்

என்.சி.பி.எச் வெளியீடு

திண்டுக்கல் பகுதியில் தோல் பதனிடும் தொழிலாளர் களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் இந்நாவல் பேசுகிறது. ஓசப்பு என்கிற தொழிலாளியைச் சாரமாகக் கொண்டு நூற்றுக்கும் கூடுதலான கதாபாத்திரங்கள் வழி தொழிலாளரின் பாடுகளை டி.செல்வராஜ் இதில் சொல்லியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x