Published : 23 Sep 2017 03:56 PM
Last Updated : 23 Sep 2017 03:56 PM
மழைப் பொழிவை அடுத்து கொங்கு மண்டலத்தின் சாயப்பட்டறைகளும் நகைப் பட்டறைகளும் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க விட்டதால் நொய்யல் ஆறு நுரை பொங்க ஓடியது. கரைபுரண்டு ஓட வேண்டிய நொய்யல் ஆறு நுரை புரண்டு ஓடியதால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்துசெய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ''நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளின் சாக்கடைக் கழிவுகள்தான் கலந்துள்ளன. பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால்தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது. இப்போது நுரை வடிந்து விட்டது. இதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை'' எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Shankar A
ஒரு கட்சியில அம்புட்டு பேருமே விஞ்ஞானியா இருந்தா எப்படிப்பா?
Mano Red
கொங்கு நாட்டுக்காரங்க யாரும் சோப்புப் போட்டு குளிக்காதீங்க- நுரை விஞ்ஞானி கருப்பண்ணன்.
கனவான்
மக்கள் சோப்பு போட்டு குளித்த நீர் கலந்ததால்தான் நொய்யலில் நுரை. சாயப்பட்டறை கழிவால் இல்லை: சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணனின் அடுத்த கண்டுபிடிப்பு
Suresh Adithya
கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பின் நுரை தான் நொய்யல் ஆற்றில் வருகிறது: அமைச்சர் கருப்பண்ணன்
#இவரு யாருய்யா, தெர்மாகோல் ராஜூவுக்கு போட்டியா.. அவரோட அண்ணன் போலிருக்கு!
rdsaravanaperumal @rdsaravanaperum
நொய்யல் ஆறு நுரைக்கு சோப்பு தண்ணீரே காரணம்: அமைச்சர் கருப்பண்ணன். மாதவம் செய்ததம்மா இந்த மாநிலம் தாங்கள் பயனுற வாழ்வதற்கு...
Krishna Kumar
கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பே நொய்யல் ஆற்றில் நுரையாக வருகிறது - அமைச்சர் கருப்பணன்.
மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
இவர்களுக்கு வாக்களித்தவர்களை நினைத்தேன்... சிரித்தேன்.
ரஹீம் கஸாலி
அமைச்சர் கருப்பணன் உண்மையை சொல்லுங்க. இப்படி சொல்லச்சொல்லி ஐடியா கொடுத்தது செல்லூர் ராஜுதானே? #ஐடியாத்துவம்
பொம்மையா முருகன்
கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பின் நுரை தான் நொய்யல் ஆற்றில் வருகிறது - அமைச்சர் .
பாம்பு கடிச்சவனுக்கு வாயில நுரை தள்ளுது... #பாம்பு சோப்பு போட்டு குளிச்சிருக்கும் போல...
Sve Shekher Venkataraman
அமைச்சர் கருப்பணன்- இதோ தமிழ்நாட்டில் தெர்மோகோலுக்கு அடுத்து நோபல் பரிசு பெறப்போகும் விஞ்ஞானி.
Smiley Azam @azam_twitz
கோவை மக்களின் சோப்பின் நுரைதான் நொய்யல் ஆற்றில் வருகிறது: அமைச்சர் கருப்பண்ணன்
அப்போ சென்னை மக்களின் பல் துலக்கும் நுரைதான் கடலில் வருகிறதா??
Gowri sankar D @GowrisankarD2
விஞ்ஞானி விருதுக்கு கடும் போட்டி...
#தெர்மாகோலுக்கும்
#நொய்யல் நுரைக்கும்...
நொய்யல் நதிக்கரையான் @MrBalajee
நான் குளித்த சோப்பு நுரை திருப்பூரை கடந்து காவிரியில் கலக்கும் என்கிற பெருமையை எப்படி சொல்வேன்..!
கபார்கான் அறந்தாங்கியான்
கோவை மக்களின் சோப்பின் நுரைதான் நொய்யல் ஆற்றில் வருகிறது- அமைச்சர் கருப்பணன்.
கோபத்துல கோயம்புத்தூர்காரங்க காறித் துப்பிடாதீங்கைய்யா... ஏற்கனவே ஆறு நாறிப்போச்சு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT