Published : 03 Dec 2016 12:39 PM
Last Updated : 03 Dec 2016 12:39 PM
தொழில்நுட்பம் எவ்வளவுக்கெவ்வளவு புதுசுபுதுசாக உருவாகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு மனிதன் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கிறான். நேற்று நாம் பெற்ற அனுபவம் இன்று வேறொன்றாக இருக்கிறது... நமது அன்றாடங்களை தொழில்நுட்பங்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன...
இன்றைக்கு இளவட்டங்களை பைத்தியமாக்கிவரும் ஒரு பிரச்சனையை மையப்படுத்தியே '4 இடியட்ஸ்' பேசுகிறது. சிஎல்ஏ சினிமாவுக்காக லலிதா செல்லதுரை தயாரித்திருக்கிறார். ஜானிஷ், பிரதீஷ் குமார், ப்ரவீண் குமார், அனிஷ் ஆகிய இளைஞர்களின் நடிப்பென்றே தெரியாத அளவுக்கான அவர்களது தற்செயலின் மெல்லிய இயல்புகளும். செல்லத்துரையின் ஒளிப்பதிவும் கௌஷிக்கின் படத்தொகுப்பும் ஒரு எட்டு நிமிடக் குறும்படம் என்ற உணர்வைமீறிய அனுபவத்தை நமக்கு வசப்படுத்துகிறது.
பசுமை அடர்ந்த நகரின் அமைதியில் நான்கு இளைஞர்களின் சந்திப்போடு படம் தொடங்குகிறது. அது கன்னியாகுமரி மாவட்டத்துக் கதை என்பது அவர்கள் பேச்சிலேயே பளிச். சமீபத்தில் கல்லூரியை முடிந்திருந்த அந்த இளைஞர்களின் கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கங்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் அவர்களது சந்திப்புகள் ஒவ்வொன்றுமே சாகசங்களாக வேண்டும் எனும் ஆசை...
திட்டமிட்டபடி அவர்கள் ஒருநாள் சந்திக்கிறார்கள். கன்னியாகுமரியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடுகரை என்ற இடத்திற்குச் செல்கிறார்கள். பைக் பயணமும், மலையேற்றமும் எப்போதும் உற்சாகம் அளிக்கக்கூடியவைதான். அந்த உற்சாகத்தின் எல்லையை மிக கவனமாகச் சொல்கிறார் இயக்குநர் செல்லதுரை.
சமூகத்துக்கு உபயோகமான செய்தியை சொல்லியிருக்கும் இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT