Published : 12 Jan 2023 07:54 PM
Last Updated : 12 Jan 2023 07:54 PM
வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக 1984-ல் இந்திய அரசு அறிவித்தது. விழுமின், எழுமின் குறிசாரும் வரை அயராது உழைமின் என்ற விவேகானந்தரின் வார்த்தைகள் இன்றைய இளைஞர்களின் காதுகளில் கேட்கவில்லையா...?
2023-ல் வல்லரசாகும் இந்தியா என்ற தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்தில் பிறந்த அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை நினைத்தால் கண்கலங்கவில்லையா..?
ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெருகி வரும் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை இருந்தாலும் இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
இத்தனை கோடி இளைஞர்களில் பாதி பேரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று காவலர் ஒருவர் கூறுகிறார். “தனக்கென சில நட்பு வட்டம், அதுவே அவர்களின் உலகம். கைபேசி, இரு சக்கர வாகனம், பாதி வெட்டாத நிலையில் தலைமுடிதான் இன்றைய இளைஞர்களின் ஸ்டைல். இது எல்லாவற்றிற்கும் மேலாக வழிகாட்டுதல் இல்லாமல்தான் இப்படி இருக்கிறார்களோ என்று நினைத்து ஏதேனும் சொல்ல முயன்றாலே ‘பூமர் அங்கிள், ஆன்ட்டி’ என்று சொல்ல வந்ததை கூட கேட்காத மனநிலையில் நம்மை கிண்டல் செய்து செல்பவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள்.
நேற்று கைபேசியில் ஒரு மீம் பார்த்து கண் கலங்கிடுச்சி. கருத்தோடதான் இருந்துச்சு. ஆனாலும் ஒரு ரணம் அதுல இருக்குது. இளைஞர் ’ ‘துணிவு’டன் தான் லாரி மேல ஏறி நடனம் ஆடினார். பாவம், என்னவோ அவன் பெற்றோருக்கு தான் ‘வாரிசு’ இல்லாமல் போனது’ என்று இருந்தது அந்த மீம்.
இளைஞர்கள் திரையில் தெரியும் மனிதருக்காக, தன்னை பெற்றவர்களையும் அனைவரையும் மறந்து இப்படியான செயல்களில் ஈடுபடுவது எங்கே செல்கிறது. இந்த இளைஞர் சமுதாயம் என்று பயம்தான் எகிறி நிற்கிறது. இளைஞர்களை ஒரேடியாக குறை சொல்லிவிடவும் முடியாது. இளம் வயதில் எதை நினைத்தாலும் சிந்திப்பதற்குள் செய்து முடிக்கும் தைரியம் கொண்டவர்கள் இளைஞர்கள். அதை சரியான பாதையில் கொண்டு போனால் சிறப்பான வாழ்வு அமைந்து சிறப்பான சமுதாய மாற்றமும் அடைந்து தன் குடும்பத்திற்கு மட்டுமின்றி நாட்டையும் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்பதை மறந்து செயல்படும் இது போன்ற இளைஞர்களை பார்த்தாலே மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார்.
மாறி வரும் தலைமுறையை மாற்றும் என்ற நம்பிக்கை இதுபோன்ற இளைஞர்களால் துளிர்க்காமல் போய்விடுமோ..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT