Published : 15 Dec 2016 12:18 PM
Last Updated : 15 Dec 2016 12:18 PM
சென்னையையே புரட்டிப் போட்ட புயலால் சுமார் 1 லட்சம் மரங்கள் மரணித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இயற்கை அன்னையின் கிளைகளாய் வேர் பரப்பிய மரங்களின் இழப்பை நெட்டிசன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
வர்தா புயலில் தன்னுயிர் விடுத்து சென்னை மக்கள் உயிர் காத்த மரங்களுக்கு வீரஅஞ்சலி செய்வோம்.
மீண்டும் மரம் நடுவோம்! மனித குலம் காப்போம்!
எங்களுக்கு நேரம் கொடு.
20 வருடங்களுக்குப் பின் சில இயற்கை வளங்களை மேம்படுத்த வேண்டும். அப்படித்தான் மரங்களும்.
மரம் நட்டு அதை மேம்படுத்த வேண்டிய வேளை வந்து விட்டது
மரம் இருந்தால் மழை வரும் என்பார்கள். மழை வந்ததால் மரங்கள் போனதே..!
1 லட்சம் மரங்கள் வளர்க்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
சின்ன வயதில் இருந்து தினமும் பார்த்துப் பழகிய இடம் இப்போது வெற்றிடமாய் மாறி இருக்கையில் மனம் வெதும்புகிறது.... #மரம் #வர்தா
மரம் நடுகிறேன் என்ற பெயரில் மண்ணுக்கும் சூழலுக்கும் பொருந்தா மரங்களை நட்டு விடாதீர்கள் நண்பர்களே..!
பெரும் ஆல மரங்களையே பிடிங்கி எறிந்திருக்கும் வார்தா! உன்னோடு எனக்கு "வார்"தான்.
சென்னை மாநகருக்கு தற்போதைய நீண்டகாலத் தேவை நிழல் தரும் மரங்கள்.
இன்றைய விதை, நாளைய விருட்சம்.
பள்ளிக் குழந்தைகளை மரம் நட ஊக்குவிப்போம்
இனி நடப்போகும் மரக்கன்றுகள் ஆழமாக வேர் விடக் கூடியவையாகவும் நல்ல பயன் தருபவையாகவும் இருக்கும்படி பார்த்து நடுவது வருங்காலத்திற்கு நல்லது!
அவ்ளோ மரம் இருந்தப்பவே வெய்யில் மண்டைய பொளக்கும், இனி சொல்லவா வேண்டும்? இனிமேல் அடுத்தவருக்குக் குழி தோண்டாமல் மரம் நடக் குழி தோண்டுவோம்.
பிள்ளைகளை இழந்த அன்னையாய் சென்னை... #மரம்
1 லட்சம் மரங்கள் நம்மைத் தாக்கவந்த புயலை எதிர்த்துப் போராடி மரணித்திருக்கின்றன. #வீரர்கள்
காற்றைக் கொடுத்த நானே காற்றால் பலியானேன்.
மனிதன் விட்டு வைத்த மிச்ச மீதியையும் அள்ளிச்சென்றது வர்தா.
மரம் நடுவதோடு எனது பங்கு முடிவதில்லை.. அதைப் பராமரிக்க வேண்டும்.. முதலில் அதை வீட்டில் செய்கிறேன்.
ஜெயதேவன்
நான் பார்த்த நகரங்களில் சென்னை மாதிரி தமிழ்நாட்டில் ஒரு நகரம் இல்லை. வானுயர் கட்டிடங்கள் இடையேகூட போயஸ் தோட்டம் மாதிரி பல இடங்களைப் பார்க்கலாம். அதேமாதிரி வட சென்னையோடு ஒப்பிடும்போது தென், மற்றும் மத்திய சென்னையில் முக்கிய சாலைகளில்கூட நெடுக மரங்கள் ஆங்காங்கே இருக்கும். அந்த மரங்களும், கடற்காற்றும் சென்னையின் சிறப்புகள். அதில் பல ஆயிரம் மரங்கள் வீழ்ந்தது மனதைச் சலனமடையச் செய்கிறது. நான் அங்கு நிரந்தரமாக வாழாவிட்டாலும் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்த நகரம் சென்னை. நகரம் வளரும் முன் வைத்த மரங்கள் பல. அதுபோல் இனி உருவாக்க முடியுமா? இந்தத் தலைமுறை ஆர்வம் காட்டுமா? மாநகராட்சி அக்கறை எடுக்குமா? நிறையக் கேள்விகள் மனதில். மரம் என்பது நம் வாழ்வோடு தொடர்புடையது அன்றோ! நம் ஆதித் தெய்வம் மரம்தான் அல்லவா!
புயலின் வேகத்தைக் குறைக்க, எல்லா வேகத்தையும் தடுத்து தன்னைத்தானே அர்ப்பணித்து மண்ணில் வீழ்ந்தன மரங்கள். இனியாவது நிறைய மரம் வளர்ப்போம்.
மரங்களை மழைக் காலத்திற்கு முன் தோகை& கிளைகளை வெட்டிவிட்டால், மரம் வேரோடு சாயாமல் இருக்கும்.
தம் உயிர் நீத்து
நம் உயிர் காத்து
வீழ்ந்திருக்கும் இம்மரங்கள்
மரங்கள் மட்டும் அல்ல, தெய்வங்கள்!
மரம் வளர்ப்போம், மனிதம் காப்போம்.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொன்னவர்களை, வீதிக்கு வீதி மரம் வெட்ட வைத்துவிட்டது வார்தா புயல்...!
வேரோடு சாய்ந்த மரம் பல மக்களைக் காத்திருக்கிறது. புயலை எதிர்த்து நின்று அதன் வேகத்தைக் குறைத்திருக்கிறது.
மரம் கொன்று அறம் மீறிச் சென்றுவிட்டாய்..
ஒரு மரம் உருவாவதே சென்னையில் குதிரைக்கொம்பு.. இப்போ 1 லட்சம் மரங்கள் சாஞ்சிடுச்சாம் புயல்ல! சென்னைக்கு சோதனை காலம்!
மரங்கள் இயற்கையின் அஸ்திவாரம்....
அத்திவாரங்களைஆட்டிவிட்டு சென்ற வார்தா புயல் அழிவினை உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறது.
இத்தனாயிரம் மரங்கள் விழுந்ததுன்னு சொல்றாங்களே ஒழிய, இதில் வாழ்ந்த பறவைகள் என்னாயிற்றுன்னு ஒருத்தர்கூட கவலைப்படலை.
இவ்வளவு மரங்கள் வீழ்ந்தது வார்தா புயல் காரணமாக மட்டுமில்லை; முறையாக பராமரித்திருந்தால் குறைந்தது பாதி மரங்களையாவது காப்பாற்றி இருக்கலாம்.
எத்தனை மரங்கள் விழுந்தனவோ அத்தனை கோவாவேசம் அன்னைக்கு.
இருந்தாலும் அவள் அன்னையல்லவா, அன்புள்ளவள் அல்லவா!
அதனாலன்றோ சுயவதை செய்துகொள்கிறாள்!!
புயல் அழித்துச் சென்றது மரத்தையல்ல, நம் வருங்கால சந்ததியினர்களுக்கான சுவாசத்தை!
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்!!
சரண் ராம்:
சென்னையின் அழகே கான்கிரீட் காடுகளைத் தாண்டியும் வளர்ந்து நிற்பவை பச்சை போர்த்திய மரங்கள்தாம். அவற்றுள் பாதி மரங்கள் வேரோடு விழுந்து கிடக்கின்றன. எஞ்சி நிற்கும் மரங்களும் கிளைகளைத் தொலைத்து பரிதாபம் ஏந்தி நிற்கின்றன.
தாக்குப்பிடித்த மரங்கள், வாழ்தலுக்கான பொருளை உணர்த்தி நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT