Published : 28 Dec 2016 02:50 PM
Last Updated : 28 Dec 2016 02:50 PM
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விலகிய நிலையில், 17 மாதங்களாக நீடித்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் பார்வை இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
Parthiban Kumar
ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ விரைவில் எம்.பி ஆகிவிடுவார் என்று தோன்றுகிறது.
Palani Maharaja
வைகோ மநகூவிலிருந்து விலகல். குரூப் அட்மினே விலகிட்டார். நேத்துதான் ஒரு நண்பர் ஒரு வாட்சப் குரூப் கிரியேட் பண்ணார் அவர் ஒருத்தருதான் அட்மின். அவரே லெஃப்ட் ஆயிட்டார். குரூப்பே இப்போ நிற்கதியா நிற்குது.
செ உதயசங்கர்
அவரே உருவாக்குவாராம், அவரே வெளியேறுவாராம்!! #வைகோ #மநகூ
Kada Jahir
கூட்ட(ணியை)த்தை சேர்த்த காரியம் முடிஞ்சது. சங்கத்தை கலைச்சாச்சு.. வைகோ
சேட்டைக்காரன் அக்குரோணி
நீங்க வேணும்னா பாருங்க இதுவும் அவர் ராஜதந்திரமாத்தான் இருக்கும்!
Aravind Kumbakonam
மநகூ விட்டு வைகோ தொண்டர்களுடன் வெளியேறியபோது.
Sa Lenin
வைகோ விலகல் இயல்பானது. மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகியிருப்பது இயல்பானது. கோடிக்கணக்கான மக்களை கொடுமையாகப் பாதித்துள்ள மோடி அரசின் செல்லாக்காசு விவகாரத்தை மீண்டும் மீண்டும் ஆதரிக்கிற வைகோ மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதோ, அதன் ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதோ நியாயமே அல்ல. அவரின் முடிவு வரவேற்கத்தக்கது.
நெருப்புடா !! கோகுல் @GokulTalks
வைகோ மநாகூவில் இருந்து தன் கட்சியினருடன் வெளியேறிய போது!!
மானஸ்தன் @im_idiotic
இத்தனைக்கும் வைகோ பின்னாடி இருக்கும் சில தொண்டர்களை நெனச்சாத்தான்..
Elango Murugesan @elango__M
ம.ந கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினார். இதனால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட வாய்ப்பு.
kishore k swamy
பாஜகவுக்காக மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ போய் இருக்கலாம். அவர் அதிமுக - பாஜக கூட்டணியை கூட உருவாக்கலாம் - திருமாவளவன்.
Kittu Kutty
மக்கள் நலனுக்காகவே மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறினார் #வைகோ. நாம இப்பிடிக்கா போவோம்.
Ezhilan M
வைகோ பரபரப்பை உண்டாக்கும் தருணங்களை உன்னிப்பாக கவனியுங்கள். அன்றைய தினம் அதிமுகவிற்கு எதிராக நடுநிலையானோர் கொந்தளிப்பாக இருந்த நேரமாக இருக்கும். #ராவ் பேட்டி!
*
வைகோ அதிகம் ஏமாற்றியது மதிமுக தொண்டர்களை தான்!
கல்லிடை பீர்முகம்மது @tharavappa
நான் என்ன செய்கிறேன் என்று சில நேரங்களில் எனக்கே தெரியாது... வைகோ.
Maruthu Iruvar Manamadurai
மக்கள் நல கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார் வைகோ. #கோபால் உங்க அடுத்த கட்ட ஆப்பரேசன் யாருக்கு கோபால்?
Selva Prasad @selvaprasad_vs
வாழ்க்கைல நம்பிக்கை குறையும் போதெல்லாம் வைகோ பின்னாடி நிக்கிற 4 பேர பாத்தாப் போதும். நம்பிக்கை ரீசார்ஜ் ஆயிரும் ...
சுரேஸ் ரா @rrsuresh
தொடர்ந்து 2 தேர்தல்களுக்கு ஒரே கூட்டணியில் வைகோ இருந்ததே இல்லைதானே?!
புகழ் @mekalapugazh
வைகோ தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் தீவிரமாக அவர் பின்னால் சென்றவர்கள் தலைவர்களல்லர்..தொண்டர்கள். அவர்கள் எவ்வளவு மனஉளச்சல் அடைந்திருப்பார்கள்..?
சரஸ்வதி வேணு கோபால்
ஜனநாயகத்தைக் காக்க, உரிமைகளைக்காக்க, எந்த எதிரியையும் எதிர்ப்போம்; எந்த நண்பனையும் ஆதரிப்போம்: #வைகோ
நித்யா @nithya_shre
மக்கள் நல கூட்டணிலிருந்து மதிமுக வெளியேறுகிறது - வைகோ அறிவிப்பு.
இதன் எதிரொலியாக மும்பை பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.
அன்பு தளபதி @anbu_thalabathi
மக்கள் நல கூட்டணி வைகோ வெளியேற்றம்...
கேப்டன்: இத அப்பவே செஞ்சிருந்தா என் கட்சி தப்பிச்சிருக்குமே!
இரண்டாம்துக்ளக் @2amtughluq
'கூட்டணி பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன்!' - இரண்டு நாட்களுக்கு முன் உருகிய வைகோ. அது போன மாசம், இது இந்த மாசம் மொமண்ட்
அன்பழகி கமல்
மதிமுகவில் இருந்தே மதிமுகவே விலகுவது மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை.
SKP Karuna @skpkaruna
எல்லா கட்சிகளும் கூட்டணிகளை மாற்றுபவைகள்தாம்! ஆனால், யாரும் வைகோ போல Dramatise செய்வதில்லை. இந்தப் பரிதாபகரமான வீழ்ச்சிக்கு அவரே முழுகாரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT