Published : 01 Dec 2016 05:27 PM
Last Updated : 01 Dec 2016 05:27 PM
இலவச அழைப்புகள், ரோமிங் கட்டண ரத்து, இலவச 4ஜி என பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவித்தது. இந்த இலவச சேவை டிசம்பர் 30 வரை எனவும் அறிவித்திருந்தது.
தற்போது ஜியோ சிம் இலவச சேவைகள் மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இதையொட்டி நெட்டிசன்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
மார்ச் மாதம் வரை ஜியோ இலவசம்- அம்பானி.
4ஜின்னு சொல்லிட்டு 3ஜி, சில நேரத்துல அதுகூட 2ஜியா மாறுது. அதான் இந்த அதிரடி.
ஜியோ வந்த பிறகு 24 மணிநேரமும் மொபைல் டேட்டா ஆன்ல இருக்கும். #Thankyou_Ambani
ரிலையன்ஸ் ஜியா 5கோடி வாடிக்கையாளர்களை தாண்டியது
.
இந்த இலக்கை தாண்ட ஏர்டெல்லுக்கு 12 ஆண்டுகளும், ஐடியா, வோடாபோனுக்கு 13 ஆண்டுகளும் ஆனது. ஜியோ எடுத்துக் கொண்டது வெறும் 83 நாட்களே... #ஓசி_எஃஃபெக்ட்
திடீர்னு அரசு கூட தர முடியாத சலுகையை ஜியோ தந்த போது யோசிக்காமல் ஏற்ற மனது, திடீர்னு செல்லாமல் போன பணத்துக்கு மட்டும் ஆயிரம் கேள்வி கேட்குது...!
ஜியோ சிம் வாங்கி, நான் ரோட்டுக்கு வந்தது தான் மிச்சம். #டவர் கிடைக்கலங்க.
...காற்றுள்ள போதே தூற்றிக்கொள்... ஜியோ இலவச சேவைகள் அனைத்தும் மார்ச் 31 வரையாம்...
இங்கே இலவசம் என்பது எதுவும் கிடையாது. நாம் எப்படி அவர்கள் சிம்மை இலவசமாகப் பேச பயன்படுத்துகிறோமோ, அதைப் போல அவர்கள் அவர்களின் நெட்வொர்க் குறைகளை இலவசமாக கண்டுபிடிக்கவே நம்மை பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் குறைகளைக் களைந்தால் மட்டுமே மார்க்கெட்டில் நிற்க முடியும் அதற்காகத்தான் இலவசம். அவ்வளவே!
Ignatius M Jayam
சாப்படறதுக்கு இலவச அரிசி, அம்மா உணவகம் இருக்கு.. நெட்டுக்கு ஜியோ சிம் இருக்கு.. இதுக்கு மேல தமிழனுக்கு என்ன வேணும்?
ஜியோ இலவச இண்டெர்நெட் மார்ச் 31 வரை நீட்டிப்பு - அம்பானி
போராளிகள்: அதான யாருப்பா அம்பானிய திட்னது?
யதார்த்தமான ஒரு உண்மை: எந்த ஒரு ஜியோ யூசர்க்கும் அவரோட ஜியோ நம்பர் என்னன்னு மொபைல் பாக்காம சொல்ல தெரியாது.
ஜியோ ஆஃபர் முடிந்தவுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன்.
அம்பானி ஜியோ சிம் விட்டு கியூவில் நிற்க டிரைனிங் குடுத்திருக்காரோ?
Yasar Arafath
ஒசீல வாங்குற ஜியோ சிம் வீடு தேடி வருதாம். ஆனா நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எடுக்க நாயா அலையணுமாம். என்ன கொடுமை இது?!
vadivel80
இனி பாக்கி இருக்கிற ஒன்னு ரெண்டு பேரும் ஜியோ வாங்கிடுவாங்கனு நெனைக்கிறேன். மார்ச் கடைசி வரைக்கும் ஃபிரீயாம்.
DexteR
நம்ம அரசாங்கத்துக்கு குடுத்த கைரேகை முதலிய அந்தரங்க தகவலை கார்ப்பரேட் முதலாளியுடன் பகிர்ந்தது சரியா..?? #ஜியோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT