Published : 10 Dec 2016 01:12 PM
Last Updated : 10 Dec 2016 01:12 PM
டிசம்பர் 10- சர்வதேச மனித உரிமைகள் தினம்
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். நம்மைச் சுற்றி அன்றாடம் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவற்றிற்கு சாட்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் இங்கே..
மற்ற எல்லா வேலைகளையும் விட துப்புரவுத் தொழிலில் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும் வேண்டும்.
துப்புரவுத் தொழிலாளர்கள் தகுந்த காலணிகளும், கையுறைகளும் அணிந்துகொண்டு வேலை செய்ய அரசு வழிவகை செய்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று உறுதியான பதிலைக் கூற முடிவதில்லை.
அரசு அவற்றை வழங்கினாலும், அவை கிழிந்துபோகும்போது அடுத்தடுத்த முறைகளில் கொடுக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டை நம்மால் காணமுடிகிறது.
'விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் இறப்பு' என்ற செய்திகள் வாடிக்கையாகி விட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு முறையான முகமூடி அளிக்கப்படாததும், அழுகிப் போய் துர்நாற்றம் வீசும் குப்பைகளைக் கையால் அள்ளச்சொல்வதும் மனித உரிமை மீறல்தான்.
மன நலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் அலையும் மனிதர்களை சக மனிதர்களாகக் கருதுகிறோமா? அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோமா? கிடைத்ததை உண்டு, கிடைக்காத போது மாண்டு போகும் மானுடங்களைக் காப்பாற்ற வேண்டியது அவர்களுக்கு நாம் அளிக்கும் மனித உரிமை.
கையுறையோ, முறையான காலணியோ இல்லாமல், கைகளாலேயே குப்பைகளைத் தரம் பிரிக்கும் துப்புரவுத் தொழிலாளர்
பெருங்குடியில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டியைச் சுத்தம் செய்கிறார்.
சாந்தோம் பேருந்து நிறுத்தத்தையே தன் இருப்பிடமாக வரித்திருக்கிறார் ஒருவர்.
தீர்க்கமான கண்கள் வழியே தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பரிமாறும் முதியவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT