Published : 19 Nov 2016 11:02 AM
Last Updated : 19 Nov 2016 11:02 AM
«
கம்பீரமாய் நடந்த
பெரும்புள்ளியின்
விரலில் இல்லை
கரும்புள்ளி.
«
காக்கா கண்ணுக்கு
மை கொண்டு வா...
என்றான் தமிழன்
விரலுக்கு மை கொண்டுவந்தது
கழுகு!
«
'மாற்றி யோசி'
என்பதன் அர்த்தம்
இப்போதுதான்
முழுமையாகப் புரிகிறது.
«
உட்கார வைத்தோம்
நிற்க வைத்துவிட்டார்கள்.
«
வெறுங்கை என்பது மூடத்தனம்...
இடது கையில் செல்
வலது கையில் செல்லாத நோட்டு!
«
எல்லா ஊர்களும்
திருநின்ற ஊரானது.
«
அன்று சுற்றி நின்று
பார்த்தோம்
இன்று வரிசையில் நின்று
பார்க்கிறோம்
கண் கட்டி ‘மை’ வித்தை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT