Published : 23 Oct 2016 01:19 PM
Last Updated : 23 Oct 2016 01:19 PM
உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய வானியல் அறிஞர் ஃபுஜிதா டெட்சுயா (Fujita Tetsuya) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஜப்பானில் புக்குவோக்கா மாகாணத் தில், கிட்டாகியூஷு என்ற ஊரில் பிறந்தார் (1920). பள்ளிப் படிப்பு முடித்து, 1943-ல் இயந்திரப் பொறியிய லாளர் பட்டம் பெற்றார். தான் பயின்ற கல்லூரியிலேயே இணைப் பேராசிரி யராகப் பணியாற்றினார். அணுகுண்டு களால் பேரழிவை எதிர்கொண்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அந்தக் கொடூரத்தின் தாக்கங்களை ஆராய்ந்தார்.
* இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, வானிலை ஆய்வுகளுக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். இடியுடன் கூடிய மழை குறித்து ஆராய்ந்தார். மின்னல் மின்னும் கால அளவுகளை வைத்து இடியின் இயக்கத்தைக் கணக்கிட்டார்.
* சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானிலை நிபுணரும் இடி, மின்னல், புயல் குறித்த தண்டர்ஸ்டோம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹாரஸ் பயர்ஸை தொடர்புகொண்டு, தான் மொழிபெயர்த்த இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவருக்கு அனுப்பி வைத்தார்.
* இந்த இளம் ஜப்பானிய வானியல் வல்லுநர் வெறும் பேப்பர், பென்சில், பாரோமீட்டர் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, புயல் உருவாவதற்கான சில அடிப்படைக் காரணங்களை நிரூபித்திருந்ததைக் கண்டு வியந்த ஹாரஸ் பயர்ஸ், இவரை சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
* இந்த அழைப்பை ஏற்று சிகாகோ சென்றார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத இவரது பிரச்சினை, படங்கள் மற்றும் வரைபடங்களால் விளக்கும் இவரது திறனை மேம்படுத்தியது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1988-ல் காற்று ஆராய்ச்சி சோதனைக் கூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
* சூறாவளிக் காற்றின் வலிமையை அளவிடும் நுட்பத்தைக் கண்டறிந்தார். இது ‘ஃபுஜிதா அளவீடு’ என்று குறிப்பிடப்படுகிறது. ஒளியின் துணையால் அளவிடப்படும் முறைகளைக் கொண்டு சூறாவளியின் வேவ்வேறு உயரங்களில் காற்றின் வேகத்தை அளக்க எஃப்-அளவீடை மேம்படுத்தி அதை 1971-ல் அறிமுகம் செய்தார். வான் போக்குவரத்தின்போது, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
* டோப்ளர் ராடார் உதவியுடன் மைக்ரோபஸ்ட் என்ற காற்றுப் பெயர்ச்சி யைக் கண்டறிந்தார். இதுதான் விமானங்கள் விபத்துக்குள்ளாக முக்கிய காரணம் என்பதைக் கூறினார். இவரது யோசனையின் படி டாப்ளர் ராடார்கள், விமான நிலையங்களில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட் டன. இவை, மைக்ரோபஸ்ட் விபத்துகளைத் தடுக்க உதவியது.
* ‘இடியுடன் கூடிய மழை, சுழற்காற்று, புயல் ஆகியவற்றின் செயல்பாடு களைச் சாதாரணமாகக் கண்காணித்தே, இவை எவ்வாறு செயல் படுகின்றன என்பதைக் குறித்து ஒரு கோட்பாட்டை வகுத்துவிடுவார். அதன் பிறகு விரிவாக ஆராய்ந்து நாங்கள் அது மிகவும் சரியானது என்று நிரூபிப்போம்’ என்கிறார் கொலராடோவில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.
* ‘ஒரு விஷயம் குறித்து நாங்கள் அனைவரும் கற்பனை செய்வதற்கு முன்பே அவர் அதைக் குறித்து திட்டவட்டமான ஒரு யோசனையைக் கொண்டிருப்பார். இவரது முறைகள் அறிவியலுக்கு முரண்பட்டதாகத் தோன்றும். ஆனால், இவரது உள்ளுணர்வின் ஞானம் சிலருக்கும் மட்டுமே வாய்த்துள்ளது’ என சக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
* அமெரிக்க தேசிய வானிலை கழக விருது உள்ளிட்ட பல விருதுக ளைப் பெற்றார். ‘டி.தியோடர் ஃபுஜிதா ஆராய்ச்சி சாதனை விருது’ என இவரது பெயரில் 2000-மாவது ஆண்டில் ஒரு விருது அறிவிக்கப்பட் டது. தன் இறுதி மூச்சுவரை ஆராய்ச்சிகளையே சுவாசித்து வந்த, ஃபுஜிதா டெட்சுயா 1998-ம் ஆண்டு 78-வது வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT