Published : 20 Oct 2016 04:04 PM
Last Updated : 20 Oct 2016 04:04 PM
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி, ட்ரம்ப் பேச்சுகள், விவாதங்களை இந்திய இணைய சமூகமும் கூர்மையாக கவனித்து வருகிறது. அவை குறித்த தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
அமெரிக்க தேர்தல் வேட்பாளர்கள் ஹிலாரி & ட்ரம்ப் நேரடி விவாதம். தமிழ்நாட்டில் விவாதம் செய்ய அழைத்தால்...?
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நேரடி விவாதங்களை பல்கலைக்கழகங்களில் நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக பள்ளிகளில் அரசியல் தொடர்பான கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே மாதிரி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதிபர் விவாதங்கள் முடிந்த பிறகு அவற்றின் பல கூறுகள் மாணவர்களிடையே அலசப்படுகின்றன. இதன் மூலம் படிக்கும்போதே அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். படிக்கிற வயசுல எதுக்கு அரசியல் என்று வசனம் பேசி இளைஞர்களை நாட்டு நடப்புகளிலிருந்து மறைத்து வைத்திருந்து பிறகு வெளியே வீசுவதில்லை.
கடைசியாக தமிழக சட்டசபையில் விவாதம் என்ற ஒன்று எப்போது நடந்தது என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.
ஹிலாரியை அதிபர் தேர்தலில் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது! - ட்ரம்ப் ஆவேசம். தேர்தல்ல ஈசியா ஜெயிக்க வழி கண்டுபிடிச்சிட்டார்.
* டிரம்ப் பேச ஆரம்பிக்கும் போது கோப ஐகான்களின் கூட்டத்தை காண முடிந்தது.
* ஆட்சிக்கு வந்தால் ஹிலாரி சிறைக்கு போக வேண்டி வரும் என்று எச்சரிக்கை. (அரசியல் பழிவாங்கல்.)
* பள்ளிக்கூட குழந்தை போல், டீச்சர் இரண்டு நிமிடம் முடிந்தும் பேசுறான் என்பது போன்று புகார்.
* தனி நபர் தாக்குதல்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி - டிரம்ப் நேரடி விவாதம்: அதேபோன்ற அறிவார்ந்த, ஆரோக்கியமான கலாச்சாரம் தமிழகத்திலும் வர வேண்டும்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஒரேமேடையில் விவாதம். #இங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்த கூட்டுறதுக்கே முடியல!
அமெரிக்கா தேர்தல் பத்தி எதுனா கருத்து சொல்லலன்னா நம்மள மக்குனு நினைச்சிடுவாங்களோ? அதனால் ட்ரம்ப் பேசுறது சரியில்லைனு சொல்லிவைப்போம்.
ஹிலாரி - டிரம்ப் இடையே நேரடி விவாதம் தொடங்கியது. >> நம்ம நாட்டில் தனித்தனியே உதார் விடுவாங்களே தவிர நேரடி விவாதத்துக்கு வரமாட்டாங்க.
ஹிலாரி கிளிண்டன் , டிரம்ப் பேசும் நேரடி நிகழ்ச்சி பார்க்கலையா?!
என்னைக்காவது உள்ளூர் வார்டு மெம்பர் பேசியதை கேட்டு இருக்கீங்களா?!
தட் ஒரு கேள்விக்கு கூட இதுவரைக்கும் ட்ரம்ப் நேரடியா பதில் சொல்லலியா.. இல்ல எனக்குதான் அமெரிக்கன் இங்கிலிஷ் புரியலையோ மொமண்ட்.. #Debates2016
ஹிலாரி, டிரம்ப் இவர்களுக்கிடையே விவாதம்.
பெண்களை தான் எப்படியெல்லாம் மயக்குவேனென்றும் ஒரு ஸ்டாராக இருந்தால் அவர்களை எங்கேயெல்லாம் பிடிக்கலாமென்றும் டிரம்ப் பேசிய ஏடாகூட ஆடியோ ஒன்று வெளியாகி டிரம்பின் சொந்தக் கட்சியினர் சிலரே அவருக்கு ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு போயிருக்கிறது. பதிலுக்கு டிரம்ப் பில் கிளிண்டனால் பாதிக்கப்பட்ட அபலைகளை அழைத்துக் கொண்டு விவாதத்துக்கு வந்திருந்தார். உள்ளூர் அரசியல்தான் இப்படி என்றால் அமெரிக்க அரசியல் அதைவிட மோசம்.
கை குலுக்கி கொள்ளாத டிரம்ப் ஹிலாரி. பரஸ்பரம் சிரிச்சிக்க கூட இல்லயாம்! அமெரிக்காவுல இருந்து ஜனநாயக பண்புகளை நாம எடுக்கிறது இருக்கட்டும், நம்ம பண்புகள் அங்கே போயிடிச்சு போலயே ?
தமிழ்நாட்டுல எந்த எந்த தொகுதிக்கு இடைத்தேர்தல்னு கேளு, தெரியாதும்பாய்ங்க ஆனா பேசுறது அமெரிக்க அதிபர் தேர்தல்.
கம்பங்கூழுக்கே வழியில்ல.. நமக்கு எதுக்கு ட்ரம்ப் நியாயம் என்றபடியே கடந்து போனார் அந்த ஏழை விவசாயி..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT