Published : 27 Oct 2016 05:53 PM
Last Updated : 27 Oct 2016 05:53 PM
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இணையவாசிகள் பகிர்ந்துகொண்ட 'வெடி'க்கருத்துகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
பிள்ளைகளுக்கு துணியும் வெடியும் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு, சம்பள பாக்கிக்காக முதலாளி சொல்லும் வேலைகளை ஓடோடி செய்வது ஆண்களின் தீபாவளி.
இனி கிராமங்களில் வளையல் கடைகளிலும், தையல்கடைகளிலும் தேவதைகளின் கூட்டம்- தீபாவளி.
நமக்கு வருடத்தில் ஒருநாள் தீபாவளி. வறுமையில் வாழும் ஏழைக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் நாட்கள் மட்டும் தீபாவளி.!
தீபாவளிக்கு மாங்கு மாங்கென்று பலகாரம் செய்து கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மாத சம்பளத்தை தீபாவளி செலவு செய்து விட்டு, மாச செலவுக்கு திண்டாட வேண்டாம் மக்கா. ஒரு நாளில் ஓடி விடும் தீபாவளி.
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சுக்கு பாகிஸ்தான் வெடிய தூக்கி உள்ள வைக்கிறதும், தீபாவளி அன்னிக்கு மழை பேஞ்சு நாம வெடிய தூக்கி உள்ள வக்கிறதும் புதுசா என்ன?
நாட்டில் ஆயிரம் நரகாசுரன்கள் உலவுகையில் ஒரே ஒரு நரகாசுரனை கொன்று தீபாவளி கொண்டாடி என்ன பயன்? #தீபாவளி
சுற்றுச் சூழல் மாசுபாடு காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது நான் பட்டாசு வெடிக்கமாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.. நீங்களும் அளவோடும் பாதுகாப்போடும் பட்டாசு வெடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்போதெல்லாம் அம்மா சுட்ட பலகாரத்தை உயர்தர ஸ்வீட் ஸடாலில் அடகு வைத்துவிட்டோம்...
புதிய ஆடையை போட்டுக்கொண்டு நம் தலைவனிடம் காட்ட திரையரங்கு சென்று விட்டோம்...
நம் வீட்டு வாசலில் போட்ட காகிதகோலத்தை பேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு மறைத்துவிட்டோம்...
ஆண்டவனே வந்தாலும் அவரை ஆன்ட்ராய்டு போனில்தான் வரவேற்கிறோம்...
அந்த நாளில் தன் குடும்பம் மொத்தமும் சந்தோசமாக இருக்க, வருடம் முழுதும் பாடுபடும் குடும்ப தலைவர்கள்/ தலைவிகள் அனைவரும் புனிதமானவர்களே.... #தீபாவளி
வெடித்த பட்டாசுகளின் பேப்பர்களை அள்ளிக்கொண்டு வந்து, வீட்டுக்கு முன் குப்பைய சேர்த்து, நாங்கதான் இந்த வருஷம் அதிக வெடி வெடிச்சமுனு நண்பன்ட்ட சொல்ற அந்த தீபாவளி யெல்லாம் நமக்கு மட்டுமே கிடைத்த வரமும் சாபமும்..
படம் வரல, துக்க தீபாவளி என்றவனை நோக்கி தண்ணியே வரல போவியா சும்மா என்று நகர்ந்தார் அந்த ஏழை விவசாயி.
தீபாவளி பலகாரம் எப்படி செய்றதுனு ஒரு குரூப்பு கெளம்பிருக்குமே!
தீபாவளி ஒரு வாரத்திற்கு முன்பே புத்தாடைகள் கிடைக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், முன்னிரவு வரை புத்தாடைகளுக்கு காத்திருக்கும் குழந்தைகள் உண்டு.
என்னதான் தன் காசில் துணி எடுத்து, வெடி வாங்கி தீபாவளியை வரவேற்றாலும் அப்பா வாங்கி கொடுத்தபோது கிடைத்த தீபாவளி சந்தோசம் இப்போ இல்லை..
தீபாவளி பண்டிகை கொண்டாடும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தயவுசெய்து ,குறைந்தது 500/- ரூபாய்க்காவது கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களையும் தீபாவளி கொண்டாட வையுங்கள்.
சிவகாசி பட்டாசுகளை வாங்கி வெடித்து மகிழுங்கள். சிவகாசி மக்களின் வாழ்க்கையில் தீபஒளியை ஏற்றுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT